Subscribe to Gizbot

மார்ச் 26-ல் இதுவரை வெளியான எல்லா செல்பீ கேமராவும் காலியாகிறது; ஏன்?

Written By:

ஒப்போ நிறுவனத்தின் ஒரு புதிய 'செல்பீ எக்ஸ்பெர்ட்' ஸ்மார்ட்போனின் அறிமுகமானது, நமது செல்பீ கைப்பற்றும் வழியையே மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆம், செல்பீ கேமராவிலும் கூட ஹை-எண்ட் அம்சங்களை உட்பொதிக்கலாம் என்பதை ஸ்மார்ட்போன் உலகிற்கு நிரூபித்து காட்டிய ஒப்போ நிறுவனத்தின் அடுத்த தலைமை சாதனமான ஒப்போ எப்7 வெளியாகவுள்ளது.

மார்ச் 26-ல் இதுவரை வெளியான எல்லா செல்பீ கேமராவும் காலியாகிறது; ஏன்?

நிறுவனத்தின் ஒப்போ எப்5, ஒப்போ எப்3 பிளஸ், ஒப்போ ஏ83 போன்றே ஸ்மார்ட்போன்களின் வெற்றியை தொடர்ந்து இன்னும் அதிக அம்சங்கள் மற்றும் மேம்பாடுகளை கொண்ட ஒப்போ எப்7, ஒரு நம்பமுடியாத 25எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இந்திய சந்தையில் மார்ச் 26, 2018 அன்று அறிமுகப்படுத்தப்படவுள்ள இக்கருவியின் தவிர்க்க முடியாத அம்சங்கள் என்னென்ன.?

மார்ச் 26-ல் இதுவரை வெளியான எல்லா செல்பீ கேமராவும் காலியாகிறது; ஏன்?

25எம்பி முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா
அறிமுகமாகவுள்ள புதிய ஒப்போ எப்7 ஆனது, உயர் மெகாபிக்சல் எண்ணிக்கை மற்றும் செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகளை கொண்ட செல்பீ கேமராவை கொண்டுள்ளது. முந்தைய கருவிகளை விட சிறந்த சென்சார் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏஐ தொழில்நுட்பம் கொண்டுள்ளதால் இது பிரகாசமான, தெளிவான மற்றும் நிஜ வாழ்க்கை செல்பீக்களை கைப்பற்ற உதவும் எல்லாவற்றிக்கும் மேலாக இந்த செல்பீ கேமரா கிடைக்கக்கூடிய ஒளியைப் புரிந்துகொண்டு, அதன் வழியாக தரமான செல்பீக்களை வெளிக்கிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 26-ல் இதுவரை வெளியான எல்லா செல்பீ கேமராவும் காலியாகிறது; ஏன்?

சவாலான ஒளி நிலைகளை சமாளிக்க நிகழ்-நேர எச்டிஆர் பயன்முறை
தற்கால ஸ்மார்ட்போன் கேமராக்கள், குறிப்பாக முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமராக்கள் சீரற்ற ஒளி நிலைமைகளில் நல்ல முடிவுகளை வழங்குவதில் தோல்வியடைகின்றன. பெரும்பாலும் மங்கலான, குறைந்த ஒளி அல்லது அதீத அளவிலான ஒளிப்படங்களை பதிவு செய்கின்றன. ஆனால் ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனில் அந்த கவலையே வேண்டாம். இதன் அறிவார்ந்த செல்பீ கேமராவானது, ஏஐ (AI) உதவியுடன் நிகழ்நேர உயர் டைனமிக் ரேஞ்ச் (HDR) புகைப்படங்களை பதிவு செய்கிறது. குறிப்பாக சவால் நிறைந்த ஒளி-நிலைமைகளின்கீழ் சிறந்த பட வெளியீடுகளை வழங்குமென்று அர்த்தம்.

மார்ச் 26-ல் இதுவரை வெளியான எல்லா செல்பீ கேமராவும் காலியாகிறது; ஏன்?

மேம்படுத்தப்பட்ட ஏஐ பியூட்டி 2.0 மோட்
ஒப்போ நிறுவனத்தின் பியூட்டி மோட் தொழில்நுட்பமானது ஒப்போ எப்5 ஸ்மார்ட்போனில் திறம்பட செயல்படுவதை கண்டோம். அது இன்னும் மேம்படுத்தப்பட்டு பியூட்டி 2.0 மோட் என்ற பெயரின்கீழ் ஒப்போ எப்7 ஸ்மாட்ர்ட்போனில் இடம்பெற்றுள்ளது. இது தோல் தோற்றங்கள் மற்றும் வண்ணம், வயது, பாலினம் ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாடுகளை கண்டறியும் திறன் கொண்டுள்ளது. சுருக்கமாக கூறினால், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒரே மாதிரியான பியூட்டி விளைவுகளை ஏற்படுத்தாமல் தனித்தனி விளைவுகளை உண்டாக்கும்.

மார்ச் 26-ல் இதுவரை வெளியான எல்லா செல்பீ கேமராவும் காலியாகிறது; ஏன்?

ஏஆர் (ஆக்மென்ட்னேட் ரியாலிட்டி) ஸ்டிக்கர்கள் மற்றும் கவர் ஷாட் அம்சம்
மேற்கூறப்பட்ட அம்சங்கள் உங்களை உற்சாகப்படுத்தவில்லை என்றால், புதிய ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனில் இடம்பெறும் ஏஆர் (ஆக்மென்ட்னேட் ரியாலிட்டி) ஸ்டிக்கர்கள் உங்கள் ஆர்வத்தை நிச்சயமாக தூண்டும். இதன் 25எம்பி செல்பீ கேமராவனது நிஜ வாழ்க்கையில் காணப்படும் பொருட்களை, ஆக்மென்ட் ரியாலிட்டி பொருட்களாக உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இது கேமரா பயன்பாட்டில் உள்ள விருப்பத்தை வெறுமனே டாப் செய்வதின் வழியாக சாத்தியமாகும். இது தவிர, புதிய ஒப்போ எப்7-ல் கவர் ஷாட் என்கிற அம்சமும் இடம்பெற்றுள்ளது. இது சார்ந்த தெளிவான விளக்கம் வெளியாகவில்லை என்றாலும் கூட இது கேமரா ஷட்டரை அழுத்தும்போது ஒவ்வொரு படத்தின் வெளியீட்டை மேம்படுத்த உதவுமென்று நம்பப்படுகிறது.

மார்ச் 26-ல் இதுவரை வெளியான எல்லா செல்பீ கேமராவும் காலியாகிறது; ஏன்?

ஏஐ போட்டோ ஆல்பம் மேனேஜ்மேண்ட்
கூறப்படும் இந்த ஏஐ போட்டோ ஆல்பம் மேனேஜ்மேண்ட் ஆனது உங்களுடைய நேசத்துக்குரிய நினைவுகளை சிறப்பாக நிர்வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் ஃபோட்டோ ஆல்பம் அம்சமும் கருவியின் சிக்கலான ஏஐ வழிமுறைகளை பயன்படுத்துமென்று எதிர்பார்க்கலாம். உடன் எளிதான மேலாண்மை மற்றும் வழிசெலுத்தலை வழங்கி, உங்கள் கருவியில் உள்ள ஒரு பிரத்யேக கேலரியில் புகைப்படத்தை வரிசைப்படுத்தலாம் மற்றும் காணலாம்.

மார்ச் 26-ல் இதுவரை வெளியான எல்லா செல்பீ கேமராவும் காலியாகிறது; ஏன்?

திரும்பி பார்க்க வைக்கும் டிசைன்
ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனின் ஒற்றை செல்பீ கேமராவே இவ்வளவு அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளதென்றால், ஒட்டுமொத்த கருவியும் எவ்வளவு அம்சங்களை உட்பொதித்து இருக்கு,மோ.?! நிச்சயமாக பெஸல்லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பு கொண்டிருக்கும். உடன் ஆண்ட்ராய்டு கொண்டு இயங்கும். மிக முக்கியமாக அதிவேக வீடியோ பின்னணி மற்றும் கேமிங் அனுபவத்தை வழங்கும். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு அற்புதமான விலைப்புள்ளியின் கீழ் வெளியாகும். இக்கருவியின் விலை மற்றும் இதர அம்சங்கள் பற்றிய விரிவான தகவல்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்துடன் இணைந்திருங்கள்.

English summary
OPPO F7 will feature a smarter AI Selfie camera and a head turning design. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot