ரூ.3,000/-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் ஒப்போ எப்7.!
மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கும் ஆதரவு கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ரேம் மாறுபாட்டை பொறுத்து 64ஜிபி அல்லது 128ஜிபி என்க்ரியா உள்ளடக்க சேமிப்புத்திறன்களை கொண்டுள்ளது.
ஓப்போ நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி ஒப்போ எப்7 என்ற ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வழியே வாங்க முடியும்.

ஒப்போ எப்7(4ஜிபி) ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.19,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, அதேபோன்று ஒப்போ எப்7(6ஜிபி) மாடலுக்கு ரூ.3000 விலைகுறைக்கப்பட்டு ரூ.23,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒப்போ எப்7
ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனின் பிரதான அம்சங்களாக, அதன் 6.23 அங்குல முழு திரை 2.0 டிஸ்ப்ளே, புத்தம் புதிய 19: 9 என்கிற காட்சி விகிதம், 25-மெகாபிக்சல் முன்பக்க கேமரா, நிகழ்நேர எச்டிஆர், ஏஐ பியூட்டி 2.0 பயன்பாடு, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஆப்-இன்-ஆப் மல்டி டாஸ்கிங்
அம்சம் ஆகியவைகள் திகழ்கிறது.

மேம்படுத்தபட்ட கேமரா.!
எப்/1.8 துளை உடனான ஒரு 16 எம்பி பின்பக்க கேமராவும், ஏஐ ஸீன் ரிககனைசேஷன் அம்சம் மற்றும் எப் / 2.0 துளை, சோனி ஐஎம்எக்ஸ் 576 சென்சார், நிகழ் நேர எச்டிஆர் விளைவுகள் ஆகியவைகளை கொண்ட ஒரு 25 மெகாபிக்சல் முன்பக்க கேமராவையும் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமராவில் சுமார் 296 முக அடையாள புள்ளிகளை கண்டறியும் (முதல் தலைமுறை தொழில்நுட்பத்தை விட 20 சதவிகிதம் கூடுதல் மேம்படுத்தல்)ஏஐ பியூட்டி 2.0 பயன்பாட்டையும் கொண்டுள்ளது.

ஆண் மற்றும் பெண்களுக்கான தனித்தனி செல்பீ.!
இது இன்னும் துல்லியமான முக அங்கீகார திறன்களை அனுமதிக்கிறது. மேலும் இந்த பயன்பாடானது ஒரு நபரின் வயது, பாலினம், தோல் நிறம் மற்றும் தோல் வகை ஆகியவற்றை தனித்தனி கண்டறிந்து செயல்படும் திறனும் கொண்டுள்ளது. சுருக்கமாக ஆண் மற்றும் பெண்களுக்கான தனித்தனி செல்பீக்களை கைப்பற்ற உதவும்.

64ஜிபி அல்லது 128ஜிபி.!
மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கும் ஆதரவு கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ரேம் மாறுபாட்டை பொறுத்து 64ஜிபி அல்லது 128ஜிபி என்க்ரியா உள்ளடக்க சேமிப்புத்திறன்களை கொண்டுள்ளது. ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களை
பொறுத்தமட்டில், 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத், யூஎஸ்பி ஓடிஜி மற்றும் ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ் ஆகியவைகளை கொண்டுள்ளது. சென்சார்களை
பொறுத்தமட்டில், அக்ஸலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் மற்றும் ப்ராக்ஸிமிட்டி ஆகியவைகளை கொண்டுள்ளது.

பேஸ் அன்லாக்.!
பின்புற பலகத்தில் கைரேகை சென்சார் ஒன்றை கொண்டுள்ள இக்கருவி முன்பக்கத்தின் வழியாக, 'பேஸ் அன்லாக்' அம்சத்தையும் ஆதரிக்கிறது. ஒரு 3400எம்ஏஎச்பேட்டரி மூலம் இயக்கப்படும் ஒப்போ எப்7 ஆனது, 33.5 மணி நேர இசை பின்னணி வரை வழங்குமென்று நிறுவனம் கூறுகிறது. அளவீட்டில் 156x75.3x7.8 மிமீ மற்றும் 158 கிராம் எடையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications