25எம்பி செல்பீ கேமராவுடன் விற்பனைக்கு வந்தது ஒப்போ எப்7.!
ஒப்போ எப்7 ஸ்மார்ட்போன் ஆனது 6.23-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே வடிமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு சிறந்த கலர் அம்சத்தை கொண்டுள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
ஒப்போ நிறுவனம் இன்று அட்டகாசமான ஒப்போ எப்7 என்ற ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் மற்றும் அமேசான் வழியாக விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது, மேலும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் இந்த ஒப்போ எப்7 ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று ஒப்போ நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம் கொண்ட ஒப்போ எப்7 சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.21,990-ஆக உள்ளது, அதே போல் 6ஜிபி ரேம் கொண்ட இந்த சாதனத்தின் விலை ரூ.26,990-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
ஒப்போ எப்7 ஸ்மார்ட்போன் ஆனது 6.23-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே வடிமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு சிறந்த கலர் அம்சத்தை கொண்டுள்ளதால்அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ எப்7 நிறுவனத்தின் கலர்ஓஎஸ் 5.0 கொண்டு இயங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 8.1.0 ஓரியோ அடிப்படையிலான ஒரு பயனுள்ள மென்பொருளாகும். இதில் ஸ்பிலிட் ஸ்கிரீன், கேம் அக்ஸலரேஷன், க்ளோன் ஆப்ஸ், தீம் ஸ்டோர் போன்ற பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த புதிய ஒப்போ எப்7
ஆனது பேஸ் அன்லாக் அம்சமும் கொண்டுள்ளது.
ஒப்போ எப்7 சாதனம் பொதுவாக 64-பிட் 4ஜிபி ஆக்டோ-கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 3400எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த
ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்லைட் சில்வர் மற்றும் டயமண்ட் பிளாக் போன்ற நிறங்களிலும் இந்த
ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 25மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ரியல்-டைம் சென்சார் எச்டிஆர் தொழில்நுட்பம் இவற்றுள்
அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சக்திவாய்ந்த சென்சார் சிறந்த அழகு விளைவுகளை உண்டாகும் அதற்கு கேமராவின் ஏஐ பியூட்டி 2.0
தொழில்நுட்பம் கைகொடுக்கும்.

இந்த ஒப்போ எப்7 வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது, குறிப்பாக ஒப்போ அங்கீகரிக்கப்பட்ட சேவை
நிலையங்களில் இருந்து ஒப்போ எப்7 டிஸ்பிளே உடைந்தால் மாற்றிக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications