Home
Mobile

ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

ஒப்போ இந்தியாவில் தனது இரண்டு வயது ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்-ஐ வெளியிடத் தொடங்கியுள்ளது. இந்த அப்டேட் புதிய கலர்ஓஎஸ் 7 யுஐ உடன் ஒப்போ எப்7-க்கு சமீபத்திய இயக்க முறைமையைக் கொண்டுவருகிறது. சமீபத்திய புதுப்பிப்பு பதிப்பு எண் CPH1819EX_11.C.12_1120_202002071659 உடன் வருகிறது, மேலும் இது ஸ்மார்ட்போனுக்கு சமீபத்திய ஜூன் 2020 பாதுகாப்பு பேட்சைக் கொண்டுவருகிறது.

ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனின் பிரதான அம்சங்களாக, அதன் 6.23 அங்குல முழு திரை 2.0 டிஸ்ப்ளே, புத்தம் புதிய 19: 9 என்கிற காட்சி விகிதம், 25-மெகாபிக்சல் முன்பக்க கேமரா, நிகழ்நேர எச்டிஆர், ஏஐ பியூட்டி 2.0 பயன்பாடு, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஆப்-இன்-ஆப் மல்டி டாஸ்கிங் அம்சம் ஆகியவைகள் திகழ்கிறது.

ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

எப்/1.8 துளை உடனான ஒரு 16 எம்பி பின்பக்க கேமராவும், ஏஐ ஸீன் ரிககனைசேஷன் அம்சம் மற்றும் எப் / 2.0 துளை, சோனி ஐஎம்எக்ஸ் 576 சென்சார், நிகழ் நேர எச்டிஆர் விளைவுகள் ஆகியவைகளை கொண்ட ஒரு 25 மெகாபிக்சல் முன்பக்க கேமராவையும் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமராவில் சுமார் 296 முக அடையாள புள்ளிகளை கண்டறியும் (முதல் தலைமுறை தொழில்நுட்பத்தை விட 20 சதவிகிதம் கூடுதல் மேம்படுத்தல்)ஏஐ பியூட்டி 2.0 பயன்பாட்டையும் கொண்டுள்ளது.

இது இன்னும் துல்லியமான முக அங்கீகார திறன்களை அனுமதிக்கிறது. மேலும் இந்த பயன்பாடானது ஒரு நபரின் வயது, பாலினம், தோல் நிறம் மற்றும் தோல் வகை ஆகியவற்றை தனித்தனி கண்டறிந்து செயல்படும் திறனும் கொண்டுள்ளது. சுருக்கமாக ஆண் மற்றும் பெண்களுக்கான தனித்தனி செல்பீக்களை கைப்பற்ற உதவும்.

ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கும் ஆதரவு கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ரேம் மாறுபாட்டை பொறுத்து 64ஜிபி அல்லது 128ஜிபி என்க்ரியா உள்ளடக்க சேமிப்புத்திறன்களை கொண்டுள்ளது. ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில், 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத், யூஎஸ்பி ஓடிஜி மற்றும் ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ் ஆகியவைகளை கொண்டுள்ளது. சென்சார்களை பொறுத்தமட்டில், அக்ஸலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் மற்றும் ப்ராக்ஸிமிட்டி ஆகியவைகளை கொண்டுள்ளது.

ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

பின்புற பலகத்தில் கைரேகை சென்சார் ஒன்றை கொண்டுள்ள இக்கருவி முன்பக்கத்தின் வழியாக, 'பேஸ் அன்லாக்' அம்சத்தையும் ஆதரிக்கிறது. ஒரு 3400எம்ஏஎச்பேட்டரி மூலம் இயக்கப்படும் ஒப்போ எப்7 ஆனது, 33.5 மணி நேர இசை பின்னணி வரை வழங்குமென்று நிறுவனம் கூறுகிறது. அளவீட்டில் 156x75.3x7.8 மிமீ மற்றும் 158 கிராம் எடையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo F7 gets Android 10 based ColorOS 7 update in India And More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X