Home
Mobile

பெசல்லெஸ் டிஸ்பிளேவுடன் மிரட்டலான ஓப்போ எப்5 யூத் அறிமுகம்.!

ஓப்போ எப்5 யூத் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹெலியோ பி23 செயலியை கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

By Prakash

ஓப்போ நிறுவனம் பெசல்லெஸ் டிஸ்பிளே மற்றும் அட்டகாசமான செல்பீ கேமரா அமைப்புடன் ஓப்போ எப்5 யூத் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஓப்போ எப்5 யூத் ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று முதல் துவங்குகிறது, மேலும் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் இந்த ஓப்போ எப்5 யூத் ஸ்மார்ட்போன் கிடைக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய டிஸ்பிளே:

பெரிய டிஸ்பிளே:

இக்கருவி 6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு (2160-1080)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக
உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 18:9 என்ற திரை விகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஆக்டோ-கோர்:

ஆக்டோ-கோர்:

ஓப்போ எப்5 யூத் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹெலியோ பி23 செயலியை கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 செல்பீ கேமரா:

செல்பீ கேமரா:

ஓப்போ எப்5 யூத் ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் எப்/2.0 லென்ஸ் கொண்டுள்ளது இந்த செல்பீ கேமரா. மேலும் இதனுடைய ரியர் கேமரா அமைப்பு 13மெகாபிக்சல் கொண்டுள்ளது, பின்பு ரியர் கேமரா எப்/2.2 லென்ஸ் மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, ஒடிஜி போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

3200எம்ஏஎச்:

3200எம்ஏஎச்:

ஓப்போ எப்5 யூத் ஸ்மார்ட்போனில் 3200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:

விலை:

ஓப்போ எப்5 யூத் ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.16.990-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

32ஜிபி மெமரி:

32ஜிபி மெமரி:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo F5 Youth with 18 9 display launched at Rs 16990 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X