16எம்பி செல்பீ கேமராவுடன் அசத்தலான ஓப்போ எப்5 யூத்.!
ஓப்போ எப்5 யூத் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6763டி செயலியை கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
சமீபத்தில் அறிமுகமான இந்த ஓப்போ எப்5 யூத் ஸ்மார்ட்போன் தொடுதிரை மற்றும் அட்டகாசமான தோற்றத்தை கொண்டுள்ளது, மேலும் இவற்றில் இடம்பெற்றுள்ள முன்புற கேமரா சிறந்த அனுபவத்தை கொடுக்கிறது, அதன்பின் பல்வேறு மென்பொருள் தொழல்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சம் என்னவென்றால் பெரிய டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் கைரேகை சென்சார் போன்றவை இந்த ஓப்போ எப்5 யூத் ஸ்மார்ட்போன் மாடலில் இடம்பெற்றுள்ளது.

பெரிய டிஸ்பிளே:
இக்கருவி 6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு (2160-1080)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக
உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 18:9 என்ற திரை விகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஆக்டோ-கோர்:
ஓப்போ எப்5 யூத் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6763டி செயலியை கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு
இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

32ஜிபி மெமரி:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

செல்பீ கேமரா:
ஓப்போ எப்5 யூத் ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் எப்/2.0 லென்ஸ் கொண்டுள்ளது
இந்த செல்பீ கேமரா. மேலும் இதனுடைய ரியர் கேமரா அமைப்பு 13மெகாபிக்சல் கொண்டுள்ளது, பின்பு ரியர் கேமரா எப்/2.2 லென்ஸ் மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயர்-சிம், ஒடிஜி போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

3200எம்ஏஎச்:
ஓப்போ எப்5 யூத் ஸ்மார்ட்போனில் 3200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:
ஓப்போ எப்5 யூத் ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.17.835-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications