டூயல் செல்பீ கேமராவுடன் வெளிவரும் ஓப்போ எஃப்5.!

Written By:

ஓப்போ நிறுவனம் விரைவில் ஓப்போ எஃப்5 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் டூயல் செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டூயல் செல்பீ கேமராவுடன் வெளிவரும் ஓப்போ எஃப்5.!

இந்த ஓப்போ எஃப்5 ஸ்மார்ட்போனின் விலை சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின் வரும் அக்டோபர் 26-ம் தேதி மணிலாவில் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது. மேலும் ஓப்போ எஃப்5 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பெசல்-லெஸ்:

பெசல்-லெஸ்:

இக்கருவி பெசல்-லெஸ் வடிவமைப்பு கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் 6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும்18:9 என்ற திரை விகிதத்தை கொண்டுள்ளது.

நினைவகம்:

நினைவகம்:

ஓப்போ எஃப்5 ஸ்மார்ட்போன் பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இடம்பெற்றுள்ளது.

 டூயல்-கேமரா:

டூயல்-கேமரா:

ஓப்போ எஃப்5 ஸ்மார்ட்போனில் செல்பீ கேமராவுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ டூயல்-கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் 20மெகாபிக்சல் ரியர் கேமராஅமைப்பை கொண்டுள்ளது ஓப்போ எஃப்5 ஸ்மார்ட்போன்.

கைரேகை சென்சார்:

கைரேகை சென்சார்:

இக்கருவியில் கைரேகை சென்சார், எல்இடி ஃபிளாஷ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளன. மேலும் மொபைல் சந்தையில்
அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 பேட்டரி:

பேட்டரி:

ஓப்போ எஃப்5 ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது. மேலும் இணையம் போன்ற வசதிகளுக்கு மிக
அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Oppo F5 with dual selfie cameras spotted in campaign video; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot