Home
Mobile

"வாவ்" சொல்ல வைக்கும் சூப்பர்குட் அம்சங்களுடன் - ஒப்போ எப்5 அறிமுகம்.!

இக்கருவியின் சிறப்பம்சங்கள் என்ன.? விலை நிர்ணயம் என்ன.? இந்திய வெளியீடு எப்போது.?

By Muthuraj

தற்போதைய ஸ்மார்ட்போன்களின் போக்குகளை மாற்றியமைக்கும் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் தானொரு முன்னோடி என்பதை ஒப்போ நிறுவனம் மீண்டும் நிரூபித்துள்ளது.

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒப்போ அதன் எப்3 ஸ்மார்ட்போனின் வெற்றியை தொடர்ந்து ஒப்போ எப்5 ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. இக்கருவியின் சிறப்பம்சங்கள் என்ன.? விலை நிர்ணயம் என்ன.? இந்திய வெளியீடு எப்போது.?

முன்பக்க கேமராவுடன் செயற்கை நுண்ணறிவு.!

முன்பக்க கேமராவுடன் செயற்கை நுண்ணறிவு.!

ஒப்போ எப்5 ஆனது அதன் முந்தைய ஸ்மார்ட்போன்களை போலவே செல்பீ அம்சங்களின் மீது அதிக கவனம் செலுத்தி ஒரு செல்பீ எக்ஸ்பெர்ட் கருவியாக வெளிவந்துள்ளது. குறிப்பாக கருவியின் முன்பக்க கேமராவுடன் செயற்கை நுண்ணறிவு (AI) பியூடிப்பை தொழில்நுட்பமானது இணைக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளியீடு எப்போது.?

இந்திய வெளியீடு எப்போது.?

ஒப்போ எப்5 ஸ்மார்ட்போனின் மெல்லிய பெஸல்லெஸ் வடிவமைபானது நிறுவனத்தின் முழு டிஸ்பிளே கனவை சாத்தியப்படுத்தியுள்ளது வருகிற நவம்பர் 2-ஆம் தேதியன்று இக்கருவி இந்தியாவில் துவங்க உள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI) செயல்படுத்தப்பட்ட பியூடிப்பை.!

செயற்கை நுண்ணறிவு (AI) செயல்படுத்தப்பட்ட பியூடிப்பை.!

அம்சங்களை பொறுத்தமட்டில், நிறுவனத்தால் பெரிதும் விளம்பரப்படுத்தப்படும் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்றாக அதன் செயற்கை நுண்ணறிவு (AI) செயல்படுத்தப்பட்ட பியூடிப்பை தொழில்நுட்பமாகும். இது முன் கேமராவில் ஒருங்கிணைக்கபட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது.

பியூட்டி-ஐரிஸ் டூல்

பியூட்டி-ஐரிஸ் டூல்

இந்த அம்சம் 200 க்கும் மேற்பட்ட போஷிஷனிங் பாயிண்ட்ஸ்னா கொண்டு எப்5 ஆனது உங்கள் முகம், மூக்கு, கன்னங்கள் மற்றும் நாடிபகுதி ஆகிய முக அடையாளங்களுக்கு இடையிலேயான சமச்சீரை அதிகரித்து, வரையறைகளை கட்டமைத்து செல்பீக்களை பதிவாகும். குறிப்பாக எப்5-ன் பியூட்டி-ஐரிஸ் டூல் ஆனது எந்தவொரு புகைப்படத்திலும் உங்கள் கண்களை பிரகாசமாக காட்சிப்படுத்தும்.

20 மெகாபிக்சல் + 16 மெகாபிக்சல்

20 மெகாபிக்சல் + 16 மெகாபிக்சல்

பொக்கே விளைவுடன் காட்சிகளைக் கிளிக் செய்யும் திறன் கொண்ட இக்கருவியின் செல்பீ கேமரா எப்/2.0 துளையுடனான ஒரு 20 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது. பின்புறத்தில் எப்/1.8 துளை மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது.

முழு எச்டி + திரை தீர்மானம் கொண்ட 6 அங்குல டிஎப்டி டிஸ்பிளே

முழு எச்டி + திரை தீர்மானம் கொண்ட 6 அங்குல டிஎப்டி டிஸ்பிளே

1080x2160 பிக்சல்களின் என்ற முழு எச்டி + திரை தீர்மானம் கொண்ட 6 அங்குல டிஎப்டி டிஸ்பிளே கொண்டுள்ள ஒப்போ எப்5 ஆனது இரட்டை நானோ சிம் கார்டுகளை ஆதரிக்கிறது மற்றும் ஒரு தனி மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்தனை தன்னுள் பொதித்துள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட்

ஒரு ஆக்டா-கோர் மீடியா டெக் (எம்டி6763டி) செயலி மூலம் இயக்கப்படும் இக்கருவி மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256ஜிபி வரையிலான மெமரி நீட்டிப்பு வழங்குகிறது. ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் அடிப்படையிலான நிறுவனத்தின் கலர்ஓஎஸ் 3.2 கொண்டு இயங்குகிறது. அளவீட்டை பொறுத்தமட்டில் 156.5x76x7.5மிமீ மற்றும் 152 கிராம் எடையுள்ளதாக இருக்கும்.

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

3200எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் இக்கருவி ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், ஜிபிஆர்எஸ் / எட்ஜ், 3ஜி, 4 ஜி, வோல்ட்இ, வைஃபை 802.11 ஏ /பி / ஜி /என் மற்றும் யூஎஸ்பி ஓடிஜி ஆகிய இணைப்பு ஆதரவுகளை வழங்குகிறது.

விலை நிர்ணயம் என்ன.?

விலை நிர்ணயம் என்ன.?

பிலிப்பைன்ஸ் நாட்டில் முன்பதிவிற்கு திறந்துவிடப்பட்டுள்ள ஒப்போ எப்5 ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு ரேம் மற்றும் சேமிப்பு வகைகளில் வருகிறது. 4ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது சுமார் ரூ .20,000/- என்ற புள்ளியில் தங்கம் மற்றும் கருப்பு வண்ணங்களில் வருகிறது.

6ஜிபி ரேம் + 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரி.!

6ஜிபி ரேம் + 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரி.!

மறுகையில் 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது சிவப்பு நிறத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் இக்கருவியின் விலை பற்றிய வார்த்தைகள் ஏதுமிலை. இந்த கைபேசியின் பிலிப்பைன்ஸ் விற்பனையானது அடுத்த வாரம் நிகழலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Oppo F5 With 20-Megapixel Selfie Camera, 6-Inch Full-Screen Display Launched: Price, Specifications. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X