Home
Mobile

மூன்று மாறுபாடுகளில், மிரட்டலான அம்சங்களுடன் ஒப்போ எப்5.!

பிலிப்பைன்ஸில் நடைபெறும் அக்டோபர் 26-ஆம் தேதி நிகழ்விற்கு பின்னர் இந்தியாவில் ஒப்போ ஒரு விழாவை நடத்துகிறது

By Muthuraj

ஒப்போ நிறுவனம் அதன் புதிய மாடல் ஒன்றை மிகவிரைவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அதன் எப்5 ஸ்மார்ட்போன் வரிசையின் கீழ் மூன்று மாறுபாடுகளை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது ஒப்போ எப்5, ஓப்போ எப்5 6 ஜிபி மற்றும் ஒப்போ எப்5 யூத் ஆகிய மூன்று வகைகளை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே தாய்லாந்தில் முன்பதிவுகளுக்கு திறந்து விடப்பட்டுள்ள இக்கருவிகள் அக்டோபர் 26-ஆம் தேதியன்று நடக்குமொரு நிகழ்வில் பிலிப்பைன்ஸில் உலகளாவிய அறிமுகத்தை நிகழ்தலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

போஸ்டர் வெளியாகியுள்ளது

போஸ்டர் வெளியாகியுள்ளது

இந்த மூன்று புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்களைக் காண்பிக்கும் ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது, அதன்படி ஒப்போ எப்5 ஆனது மேம்படுத்தப்பட்ட செல்பீ அனுபவத்தை தேடும் வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டுள்ளதை அறியமுடிகிறது.

இரட்டை கேமரா சென்சார்கள்

இரட்டை கேமரா சென்சார்கள்

கூடுதலாக, சில செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான செல்பீ அம்சங்களும் இக்கருவிகளில் இடம்பெறுவதாக கூறப்பட்டுள்ளது. அசல் ஒப்போ எப்5 மற்றும் அதன் புதிய வரம்பிலான எப்5 6ஜிபி மாறுபாடுகள் இரண்டுமே அதன் முன்பக்கத்தில் இரட்டை கேமரா சென்சார்கள் கொண்டுள்ளது.

செல்பீ கேமரா

செல்பீ கேமரா

ஆக, மூன்றாவது வகையான ஒப்போ யூத் தான் இந்த தொடரில் மிகவும் மலிவான ஒரு ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதை அறியமுடிகிறது. இக்கருவி முன் எதிர்கொள்ளும் ஒரு செல்பீ கேமராவுடன் வருகிறது.

முழு எச்டி+ தீர்மானம்

முழு எச்டி+ தீர்மானம்

ஒப்போ எப்5 ஆனது ஒரு குறைந்தபட்ச-பெஸல்கள் அளவிலான டிஸ்பிளேவை போஸ்டரில் வெளிப்படுத்துகிறது. அதாவது ஒரு 6 அங்குல அளவு மற்றும் முழு எச்டி+ தீர்மானம் (1080x2160 பிக்சல்கள்) கொண்ட டிஸ்பிளே கொண்டுள்ளது.

6ஜிபி ரேம்

6ஜிபி ரேம்

மேலும், அசல் மாறுபாடு 4ஜிபி ரேம் கொண்டிருக்குமென்றும் கூறப்படுகிறது, அதே நேரத்தில் எப்5 6ஜிபி ரேம் மறுபாடானது 64 ஜிபி உள் சேமிப்புடன் அறிமுகப்படுத்தப்படும், உடன் மைக்ரோ எஸ்டி வழியாக 256 ஜிபி வரையிலான நீட்டிப்பு ஆதரவும் வழங்கும்.

20 மெகாபிக்சல் கேமரா

20 மெகாபிக்சல் கேமரா

கேமராத்துறையை பொறுத்தமட்டில், ஒப்போ எப்5 மற்றும் எப்5 6ஜிபி ஆகியவைகள் 20 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டிருக்கலாம் உடன் எல்இடி ப்ளாஷ் கொண்டிருப்பதாகவும் போஸ்டர் தெரிவிக்கிறது.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

இறுதி மாறுபாடான எப்5 யூத் ஆனது பின்புறத்தில் 16 மெகாபிக்சல் சென்சார் கொண்டிருப்பதாக தோன்றுகிறது. தவிர, வெளியான மூன்று ஒப்போ எப்5 தொடர் அக்கருவிகளும் பின்புறத்தில் எதிர்கொள்ளும் கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது. குறிப்பாக மென்பொருள் வழியிலான பேஸ் டிடெக்ஷன் அம்சமும் கொண்டுள்ளது.

நவம்பர் 2

நவம்பர் 2

பிலிப்பைன்ஸில் நடைபெறும் அக்டோபர் 26-ஆம் தேதி நிகழ்விற்கு பின்னர் இந்தியாவில் ஒப்போ ஒரு விழாவை நடத்துகிறது. அந்த விளைவால் இந்த மூன்று எப்5 மாடல்களும் அறிமுகப்படுத்தப்படும், அடுத்த மாதம் நவம்பர் 2-ஆம் தேதியன்று இந்திய வெளியீடு இருக்கலாம்.

Best Mobiles in India

English summary
Oppo F5 Tipped to Launch in 3 Variants, All With AI-Powered Selfie Features. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X