புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் அசத்தலான ஓப்போ எப்5.!

By Prakash
|

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓப்போ எப்5 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது ஓப்போ நிறுவனம், இந்த ஸ்மார்ட்போனில் அதிநவீன தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் அந்நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன்படி ஓப்போ எப்5 சிதார்த் லிமிடெட் எடிஷனை வரும் பிப்ரவரி 8-ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். மேலும்
ப்ளூ நிற மாறுபாட்டில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஓப்போ எப்5 சிதார்த் லிமிடெட் எடிஷன் அமேசான் வலைதளம் மூலம் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை 4ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் முறையே ரூ.14,990 மற்றும ரூ.19,990-வரை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பக்க கேமராவுடன் செயற்கை நுண்ணறிவு

முன்பக்க கேமராவுடன் செயற்கை நுண்ணறிவு

ஒப்போ எப்5 ஆனது அதன் முந்தைய ஸ்மார்ட்போன்களை போலவே செல்பீ அம்சங்களின் மீது அதிக கவனம் செலுத்தி ஒரு செல்பீ எக்ஸ்பெர்ட் கருவியாக வெளிவந்துள்ளது. குறிப்பாக கருவியின் முன்பக்க கேமராவுடன் செயற்கை நுண்ணறிவு (AI) பியூடிப்பை தொழில்நுட்பமானது இணைக்கப்பட்டுள்ளது.

பியூட்டி-ஐரிஸ் டூல்

பியூட்டி-ஐரிஸ் டூல்

இந்த அம்சம் 200 க்கும் மேற்பட்ட போஷிஷனிங் பாயிண்ட்ஸ்னா கொண்டு எப்5 ஆனது உங்கள் முகம், மூக்கு, கன்னங்கள் மற்றும் நாடிபகுதி ஆகிய முக அடையாளங்களுக்கு இடையிலேயான சமச்சீரை அதிகரித்து, வரையறைகளை கட்டமைத்து செல்பீக்களை பதிவாகும். குறிப்பாக எப்5-ன் பியூட்டி-ஐரிஸ் டூல் ஆனது எந்தவொரு புகைப்படத்திலும் உங்கள் கண்களை பிரகாசமாக காட்சிப்படுத்தும்.

 20 மெகாபிக்சல் + 16 மெகாபிக்சல்

20 மெகாபிக்சல் + 16 மெகாபிக்சல்

பொக்கே விளைவுடன் காட்சிகளைக் கிளிக் செய்யும் திறன் கொண்ட இக்கருவியின் செல்பீ கேமரா எப்/2.0 துளையுடனான ஒரு 20 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது. பின்புறத்தில் எப்/1.8 துளை மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது.

 முழு எச்டி + திரை தீர்மானம் கொண்ட 6 அங்குல டிஎப்டி டிஸ்பிளே

முழு எச்டி + திரை தீர்மானம் கொண்ட 6 அங்குல டிஎப்டி டிஸ்பிளே

1080x2160 பிக்சல்களின் என்ற முழு எச்டி + திரை தீர்மானம் கொண்ட 6 அங்குல டிஎப்டி டிஸ்பிளே கொண்டுள்ள ஒப்போ எப்5 ஆனது இரட்டை நானோ சிம் கார்டுகளை ஆதரிக்கிறது மற்றும் ஒரு தனி மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்தனை தன்னுள் பொதித்துள்ளது.

 இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

3200எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் இக்கருவி ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், ஜிபிஆர்எஸ் / எட்ஜ், 3ஜி, 4 ஜி, வோல்ட்இ, வைஃபை 802.11 ஏ /பி / ஜி /என் மற்றும் யூஎஸ்பி ஓடிஜி ஆகிய இணைப்பு ஆதரவுகளை வழங்குகிறது.

 ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட்

ஒரு ஆக்டா-கோர் மீடியா டெக் (எம்டி6763டி) செயலி மூலம் இயக்கப்படும் இக்கருவி மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256ஜிபி வரையிலான மெமரி நீட்டிப்பு வழங்குகிறது. ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் அடிப்படையிலான நிறுவனத்தின் கலர்ஓஎஸ் 3.2 கொண்டு இயங்குகிறது. அளவீட்டை பொறுத்தமட்டில் 156.5x76x7.5மிமீ மற்றும் 152 கிராம் எடையுள்ளதாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Oppo F5 Sidharth Limited Edition launched for Rs 19990 sale debuts on February 8 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X