விரைவில் 6-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் ஓப்போ எஃப்5.!
ஓப்போ நிறுவனம் விரைவில் 6-இன்ச் டிஸ்பிளேவுடன் ஓப்போ எஃப்5 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஓப்போ நிறுவனம் விரைவில் 6-இன்ச் டிஸ்பிளேவுடன் ஓப்போ எஃப்5 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் (2880-1440)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இதற்க்கு முன்பு ஓப்போ எஃப்3 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம், ஓப்போ எஃப்3 பொறுத்தவரை 16மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8மெகாபிக்சல் முன்புற கேமரா கொண்டவையாக உள்ளது. ஆட்டோ ஃபோகஸ் மற்றும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவை கொண்டுள்ளது இந்த எஃப்3 ஸ்மார்ட்போன்
ஓப்போ எஃப்3 பொதுவாக 5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது, அதன்பின் மீடியாடெக் எம்டி6750டி செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.
இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் 3200எம்ஏஎச் பேட்டரி ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது


Click it and Unblock the Notifications