சந்தையின் மிகப்பெரிய "செல்பீ எக்ஸ்பெர்ட்" வறார்.. வழி விடுங்கோ.!

|

சரியான நேரத்தில் இந்திய சந்தையில் களமிறங்கியுள்ள ஒப்போ எப்5 ஆனது, செல்பீ அம்சத்தில் அதிக கவனம் செலுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க செல்பீ எக்ஸ்பெர்ட் ஸ்மார்ட்போன் என்பதில் சந்தேகமேயில்லை. ஸ்மார்ட்போன்களின் செல்பீ கேமராவில் "இயந்திர கற்றல்" தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தும் முதல் கருவியாக ஒப்போ எப்5 திகழ்கிறது.

சந்தையின் மிகப்பெரிய

20 எம்பி அளவிலான முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமராவை கொண்டுள்ள ஒப்போ எப்5 ஆனது மேம்படுத்தப்பட்ட பியூட்டிபை தொழில்நுட்பத்துடன் வருகிறது. அதுமட்டுமின்றி, பதிவாகும் செல்பீக்களை மேம்படுத்த சிக்கலான ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (செயற்கை நுண்ணறிவு) நெறிமுறைகளையும் பயன்படுத்துகிறது.

அடுத்தக்கட்ட அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது!

அடுத்தக்கட்ட அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது!

தவிர ஒப்போ எப்5 ஸ்மார்ட்போனின் புதிய 18: 9 திரை விகித அளவிலான 6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்பிளேவானது கேமிங், இணைய உலாவுதல், வாசிப்பு மற்றும் வீடியோ பின்னணி ஆகியவற்றிற்கான அடுத்தக்கட்ட அனுபவத்தை வழங்கவும் தயாராக உள்ளது. மேலும் புதிய ஒப்போ எப்5 ஆனது தன்னுள் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளதென்பதை விரிவாக காண்போம்.!

உன்னதமான 6 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளே

உன்னதமான 6 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளே

இதன் முழு எச்டி ப்ளஸ் டிஸ்பிளேவானது, கிட்டத்தட்ட ஒரு பெஸல்லெஸ் டிஸ்பிளே போன்றே காட்சியளிக்கிறது. இது 2160 x 1080 பிக்சல்களின் தீர்மானம் வழங்கும் ஒரு உன்னதமான 6 அங்குல முழு எச்டி + திரையை கொண்டுள்ளது. அதாவது 18: 9 என்றதொரு புதிய விகிதம் கொண்டுள்ளது. இந்த அளவிலான டிஸ்பிளே சிறிய வடிவத்தில் அதிக உள்ளடக்கத்தை உட்கொள்ள அனுமதிக்கும். மேலும் ஒப்போ எப்5 ஸ்மார்ட்போனை ஒரு கையால் பிடித்து பயன்படுத்த முடியுமா என்ற சந்தேகமும் வேண்டாம், நிச்சயமாக முடியும்.

ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்

ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்

முன்னரே கூறியபடி, ஒப்போ எப்5 ஸ்மார்ட்போன் ஆனது உங்களின் அடுத்தகட்ட செல்பீக்களை உறுதி செய்யும் வண்ணத்திலான ஒரு புதிய தொழில்நுட்பத்தை உள்ளடக்கியுள்ளது. இதன் 20எம்பி அளவிலான செல்பீ கேமராவில் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் டூல் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பமானது ஒரு மிருதுவான மற்றும் நிகரில்லாத செல்பீக்களை பதிவு செய்ய அதுவும்.

மேம்படுத்தப்பட்ட பியூட்டிப்பை + பொக்கே விளைவு

மேம்படுத்தப்பட்ட பியூட்டிப்பை + பொக்கே விளைவு

இது தவிர ஒப்போ எப்5 ஆனது மேம்படுத்தப்பட்ட பியூட்டிப்பை தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது சிக்கலான ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் (AI) நெறிமுறைகளை பயன்படுத்துகிறது. இதன் வழியாக ஒரு செல்பீ கேமராவால் எந்த எல்லையை அடைய முடியுமோ அதை ரோபோ எப்5 நிகழ்த்திக்காட்டும். மேலும் செல்பீக்களில் இயல்பான பொக்கே விளைவுதனை பெற கேமராவின் டெப்த் மோட் முறைமையை இயக்குவதின் மூலம் பெறலாம்.

மிக பெரிய மற்றும் சிறந்த பேட்டரி ஆயுள்

மிக பெரிய மற்றும் சிறந்த பேட்டரி ஆயுள்

ஒப்போ எப்5 ஆனது டிஸ்பிளே மற்றும் கேமரா அம்சத்தில் மட்டுமின்றி பேட்டரித்திறனிலும் சிறப்பானதொரு கருவியாக உருவாக்கம் பெற்றுள்ளது. இக்கருவி ஒரு பெரிய 3200எம்ஏஎச் பேட்டரி யூனிட்டை ஆதரிக்கிறது இதன் மூலம் உங்களின் முக்கிய பணிகளுக்கு இடையே ஒருபோதும் பேட்டரி ட்ரை ஆகாது (இறக்காது) என்பதை ஒப்போ நிறுவனம் உறுதி செய்துள்ளது. தவிர இந்த ஸ்மார்ட்போன் ஒப்போ நிறுவனத்தின் ஈர்க்கக்கூடிய விஓஓசி சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் ஆதரிக்கிறது. இது ஒரு நாள் முழுவதுமான பேட்டரி ஆயுளை நீட்டிக்க உதவும். முந்தைய மாறுபாடான எப்3 உடன் ஒப்பிடுகையில் இதன் பேட்டரி ஆயுள் 18% வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹை-எண்ட் மென்பொருள்கள்

ஹை-எண்ட் மென்பொருள்கள்

நம்புங்கள், ஒப்போ எப்5 ஆனது ஸ்பிலிட் ஸ்க்ரீன் மோட், கெஸ்டர் மற்றும் மோஷன், க்ளோன் ஆப்ஸ் போன்ற பல மென்பொருள் அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் அடிப்படையிலான நிறுவனத்தின் கலர்ஓஎஸ்வி3.2 கொண்டு இயங்கும் இக்கருவி தினசரி மொபைல் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான ஸ்பிலிட் ஸ்க்ரீன் பயன்முறை கொண்டுள்ளது. உடன் சைகை & அசைவு மூலம் கட்டுப்பாடுகள் நிகழ்த்தும் அம்சம், குளோன் அப்ளிகேஷன்ஸ் போன்ற பல உள்ளுணர்வு மென்பொருள்களை தன்னுள் இணைக்கப்பெற்றுள்ளது. மேலும், ஒப்போ எப்5 ஆனது ப்ரைவஸி ப்ரொடெக்ஷன், வைரஸ் ஸ்கேன் மற்றும் பேமண்ட் ப்ரொடெக்ஷன் போன்ற அதன் வழக்கமான பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.

மென்மையான செயல்திறன் அனுபவம்

மென்மையான செயல்திறன் அனுபவம்

செல்பீ எக்ஸ்பெர்ட் ஒப்போ எப்5 ஸ்மார்ட்போன் ஆனது 254 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4ஜிபி / 6ஜிபி ரேம் உடன் இணைந்த மீடியாடெக் எம்டி6763டி ஆக்டாகோர் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஆக ஒப்போ எப்5 ஸ்மார்ட்போன் எந்தவிதமான செயல்திறன் சிக்கல்களும் இல்லாமல் - ஒரே நேரத்தில் பல பயன்பாடுகள் அல்லது கிராஃபிக்-தீவிர கேம்ஸ் அல்லது மிகத்தீவிர பயன்பாடுகள் ஆகியவற்றை நிர்வகிக்க உதவும். இதன் கேம் அக்ஸலரேஷன் மோட் ஆனது புத்திசாலித்தனமாக ஒரு மென்மையான கேமிங் அனுபவத்தை வழங்கும்.

விலை மற்றும் கிடைக்கும்தன்மை

விலை மற்றும் கிடைக்கும்தன்மை

மேற்கண்ட விமர்சனங்களில் இருந்தே இக்கருவி ஒரு பவர் பேக்டு ஸ்மார்ட்போன் என்பதை உணர்ந்திருப்பீர்கள். உங்களுக்குள் ஆவல் கிளம்பி இதன் விலை மற்றும் கிடைக்கும்தன்மை பற்றிய விவரங்களை வேறெங்கும் தேட வேண்டாம். இதன் 4ஜிபி ரேம் என்ற அடிப்படை மாதிரியின் விலை ரூ.19,990/- ஆகும் மற்றும் இதன் மேம்படுத்தப்பட்ட 6 ஜிபி ரேம் மாதிரியானது ரூ.24.990/- ஆகும். நவம்பர் 2 தொடங்கி வருகிற நவம்பர் 8 வரை முன்பதிவுகளுக்கு திறந்து விடப்பட்டுள்ள இக்கருவி நவம்பர் 9 முதல் விற்பனையை தொடங்கும். ஒப்போ ஷோரூம்களில் டிசம்பர் 9 முதல் விற்பனையை தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OPPO F5: AI enabled Selfie Expert for perfect Selfies and vivid multimedia experience. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X