அடுத்த மாதம் களமிறங்கும் புதிய ஒப்போ 5ஜி போன்கள்.. 50எம்பி கேமரா.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ எப்35 5ஜி மற்றும் ஒப்போ எப்35 ப்ரோ 5ஜி ஆகிய இரண்டு போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, வரும் அக்டோபர் 5-ம் தேதி இந்த இரண்டு போன்களும் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
அதாவது டிப்ஸ்டார் பாரஸ் குக்லானி (@passionategeekz) இந்த போன்களின் அறிமுக தேதியை வெளியிட்டுள்ளார். இதுதவிர ஒப்போ எப்35 5ஜி போனின் முக்கிய விவரக்குறிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒப்போ எப்35 5ஜி அம்சங்கள் (OPPO F35 5G Specifications): 6.78-இன்ச் பிளாட் AMOLED டிஸ்பிளே உடன் ஒப்போ எப்35 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
மீடியாடெக் டைனம்சிட்டி 6360 (MediaTek Dimensity 6360) உடன் ஒப்போ எப்35 5ஜி போன் வெளிவரும். அதுவும் இந்த சிப்செட் மேம்பட்ட சிபியு மற்றும் ஜிபியு வேகத்தை கொடுக்கும். அதேபோல் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் ஒப்போ எப்35 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா உடன் ஒப்போ எப்35 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகும். குறிப்பாக இந்த போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதியும் இந்த போனில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த போன் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) போன்ற அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.
8000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒப்போ எப்35 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நான்கு நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஒப்போ எப்35 5ஜி போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ஒப்போ எப்35 5ஜி மாடல் ஆனது ரூ.35,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்போ எப்35 ப்ரோ 5ஜி அம்சங்கள்: 6.78-இன்ச் டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 7360 சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமராக்கள், 50எம்பி செல்பி கேமரா, 10,000எம்ஏஎச் பேட்டரி, 80W சார்ஜிங், ஐபி69 ரேட்டிங் உள்ளிட்ட அம்சங்கள் ஒப்போ எப்35 ப்ரோ 5ஜி போனில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த போன் ரூ.45,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
