Home
Mobile

தம்பி விவோ கொஞ்சம் ஓரம்போ.. 10000எம்ஏஎச் பேட்டரி.. இந்தியாவுக்கு வருகிறது புது ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ எப்35 ப்ரோ (Oppo F35 Pro) ஸ்மார்ட்போனை இந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுவும் சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் மாடல் தான் இந்தியாவில் ஒப்போ எப்35 ப்ரோ எனும் பெயரில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 6-ம் தேதி இந்தியாவில் விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய விவோ போனுக்கு போட்டியாக தான் ஒப்போ எப்35 ப்ரோ போன் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த ஒப்போ எப்35 ப்ரோ போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

தம்பி விவோ கொஞ்சம் ஓரம்போ.. இந்தியாவுக்கு வருகிறது புது ஒப்போ 5ஜி போன்

ஒப்போ எப்35 ப்ரோ அம்சங்கள் (Oppo F35 Pro Specifications): தரமான ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 (Snapdragon 4 Gen 5) சிப்செட் உடன் ஒப்போ எப்35 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ ஜி629 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த புதிய போனில் உள்ளது.

அதேபோல் 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் ஒப்போ எப்35 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2772 × 1272 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 10-பிட் கலர், 1800 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

குறிப்பாக ColorOS 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒப்போ எப்35 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

ஒப்போ எப்35 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி monochrome சென்சார் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேவும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய ஒப்போ போனில் உள்ளன.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது ஒப்போ எப்35 ப்ரோ ஸ்மார்ட்போன். அதேபோல் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் இந்த புதிய ஒப்போ போனில் உள்ளது.

தம்பி விவோ கொஞ்சம் ஓரம்போ.. இந்தியாவுக்கு வருகிறது புது ஒப்போ 5ஜி போன்

12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ஒப்போ எப்35 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ எப்35 ப்ரோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

10000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒப்போ எப்35 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த புதிய ஒப்போ போன் இந்தியாவில் ரூ.35,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Oppo F35 Pro India launch Timeline and specifications leaked online: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X