அக்டோபர் 5-ல் களமிறங்கும் புது ஒப்போ 5ஜி போன்.. 10000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
ஒப்போ எப்35 5ஜி மற்றும் ஒப்போ எப்35 ப்ரோ 5ஜி ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் வரும் அக்டோபர் 5-ம் தேதி மதியம் 12 மணி அளவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. குறிப்பாக இந்த போன்கள் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போன்களின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
ஒப்போ எப்35 ப்ரோ 5ஜி அம்சங்கள் (OPPO F35 Pro 5G Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 சிப்செட்(Qualcomm's Snapdragon 4 Gen 5 chipset) உடன் ஒப்போ எப்35 ப்ரோ 5ஜி போன் வெளிவரும். அதுவும் இந்த சிப்செட் மேம்பட்ட சிபியு மற்றும் ஜிபியு வேகத்தை கொடுக்கும். அதேபோல் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

ஒப்போ எப்35 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் பிளாட் AMOLED டிஸ்பிளே உடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
குறிப்பாக 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் ஒப்போ எப்35 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
அதுவும் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா உடன் ஒப்போ எப்35 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகும். குறிப்பாக இந்த போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதியும் இந்த போனில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த போன் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) போன்ற அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.
இந்த ஒப்போ எப்35 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 10000எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நான்கு நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

மேலும் 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஒப்போ எப்35 ப்ரோ 5ஜி போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ஒப்போ எப்35 ப்ரோ 5ஜி மாடல் ஆனது ரூ.45,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்போ எப்35 அம்சங்கள்: மீடியாடெக் டைனம்சிட்டி 6360 (MediaTek Dimensity 6360) சிப்செட், 6.78-இன்ச் பிளாட் AMOLED டிஸ்பிளே, 50எம்பி டூயல் ரியர் கேமரா, 50எம்பி செல்பி கேமரா, 8000எம்ஏஎச் பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களுடன் ரூ.35,000 பட்ஜெட்டில் ஒப்போ எப்35 போன் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications
