தலைவன் வேற ரகம்.. 8000mAh பேட்டரி, 80W சார்ஜிங்.. IP69 ரேட்டிங், OIS கேமரா.. புது OPPO ஸ்மார்ட்போன்!
குரூப் செல்பீ எக்ஸ்பெர்ட் கேமரா கொண்ட மாடலாக ஓப்போ எப்35 ப்ரோ 5ஜி (OPPO F35 Pro 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 6 வருடங்களுக்கு ஸ்மூத்னஸ் புரொடெக்சன் கொடுக்கிறது. 360 டிகிரி ஆர்மர் பாடி கிடைக்கிறது. இந்த ஓப்போ எப்35 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை பார்க்கலாம்.
ஓப்போவின் எப் சீரிஸ் மாடல்களில் மிட்-ரேஞ்ச் பட்ஜெட் மாடல்களாக ஓப்போ எப்35 5ஜி மற்றும் ஓப்போ எப்35 ப்ரோ 5ஜி வெளியாகி இருக்கின்றன. பட்ஜெட் பிரியர்களுக்கு ஏற்ற மாடல்களாக இருக்கவில்லை. இருப்பினும், விலை ஏற்ப பீச்சர்களை பார்க்க முடிகிறது. டியூரபிலிட்டி மற்றும் பர்ஃபாமென்ஸ் பட்டையை கிளப்புகிறது.

ஓப்போ எப்35 ப்ரோ 5ஜி அம்சங்கள் (OPPO F35 Pro 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7360 மேக்ஸ் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7360 Max 4nm) சிப்செட் கொண்ட ஓப்போ எப்35 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) பேஸ்டு கலர்ஓஎஸ் 16.5 (ColorOS 16.5) கிடைக்கிறது.
6.78 இன்ச் (2772 x 1272 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த ஓப்போ எப்35 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 3600 நிட்ல் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் டிசி டிம்மிங் (DC Dimming) உள்ளது.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை கொடுத்து இருக்கிறது.
4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஆட்டோ போகஸ் சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக 50 எம்பி செல்பீ கேமராவை கொடுத்து இருக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கிறது. இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) உள்ளது. 8.4 எம்எம் தடிமன் மற்றும் 210 கிராம் எடை உள்ளது.
80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 8000mAh பேட்டரி உள்ளது. டைப்-சி ஆடியோ மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ /என்எஸ்ஏ, 4ஜி வோஎல்டிஇ, வை-பை 6 மற்றும் ப்ளூடூத் 5.4 கிடைக்கிறது.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.45,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.49,999ஆகவும் இருக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.54,999ஆகவும் இருக்கிறது. வருகிற அக்டோபர் 11ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.
சன்ரைஸ் ஆரஞ்ச் (Sunrise Orange), வேவ் ப்ளூ (Wave Blue) மற்றும் டிவைலைட் பிரவுண் (Twilight Brown) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. எஸ்பிஐ, எச்டிஎப்சி உள்ளிட்ட கிரெடிட் கார்டுகளுக்கு 10 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. 18 மாதங்களுக்கு ஜீரோ டவுன்பேமெண்ட், எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications
