Home
Mobile

10000எம்ஏஎச் பேட்டரி உடன் களமிறங்கும் புது ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை?

ஒப்போ நிறுவனம் அடுத்து ஒப்போ எப்35 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் இந்த மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் மாதம் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும்.

இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு ஒப்போ எப்35 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.

10000எம்ஏஎச் பேட்டரி உடன் களமிறங்கும் புது ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்

ஒப்போ எப்35 ப்ரோ 5ஜி அம்சங்கள் (OPPO F35 Pro 5G Specifications): 6.78-இன்ச் பிளாட் AMOLED டிஸ்பிளே உடன் ஒப்போ எப்35 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 சிப்செட்(Qualcomm's Snapdragon 4 Gen 5 chipset) உடன் ஒப்போ எப்35 ப்ரோ 5ஜி போன் வெளிவரும். அதுவும் இந்த சிப்செட் மேம்பட்ட சிபியு மற்றும் ஜிபியு வேகத்தை கொடுக்கும். அதேபோல் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் ஒப்போ எப்35 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா உடன் ஒப்போ எப்35 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகும். குறிப்பாக இந்த போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதியும் இந்த போனில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த போன் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) போன்ற அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.

10000எம்ஏஎச் பேட்டரி உடன் களமிறங்கும் புது ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்

10000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒப்போ எப்35 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நான்கு நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஒப்போ எப்35 ப்ரோ 5ஜி போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ஒப்போ எப்35 ப்ரோ 5ஜி மாடல் ஆனது ரூ.45,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

photo credits: oppo, indiatimes, gadgetsnow

Best Mobiles in India

English summary
OPPO F35 Pro 5G Design Leaked Ahead of Launch: Expected Price and Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X