Home
Mobile

வந்துட்டான் சிங்கக்குட்டி.. 8000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. எந்த மாடல்?

ஓப்போ பிரியர்களை வெயிட்டிங் மோடில் போட்டு வைத்த ஓப்போ எப்35 5ஜி (OPPO F35 5G) ஸ்மார்ட்போன் வெளியாகிவிட்டது. அல்ட்ரா பிரீமியம் குவாலிட்டி கொண்ட மாடலாகவும், கேமிங் மற்றும் ஓடிடி பிரியர்களுக்கு அதிக பேக்கப் கொடுக்கும்படியான மாடலாகவும் இருக்கிறது. முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஓப்போ எப்35 5ஜி மற்றும் ஓப்போ எப்35 ப்ரோ 5ஜி ஆகிய மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளத்தில் இந்த வார இறுதியில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. மிலிட்டரி கிரேடு புரொடெக்சன், அண்டர்வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளிட்ட பீச்சர்களுடன் டைமன்சிட்டி 6360 மேக்ஸ் சிப்செட்டை கொடுக்கிறது.

வந்துட்டான் சிங்கக்குட்டி.. 8000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. மாடல்?

ஓப்போ எப்35 5ஜி அம்சங்கள் (OPPO F35 5G Specifications): 6.57 இன்ச் (2372 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1000Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.

397 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மோனோகுரோம் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்ட மாடலாக இந்த ஓப்போ எப்35 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஆட்டோபோகஸ் கிடைக்கிறது.

2.5K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. டூயல்-வியூ வீடியோ (Dual View Video) எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. 10X டிஜிட்டல் ஜூமிங் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆட்டோபோகஸ் கொண்ட 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. கலர்ஓஎஸ் 16.0 (ColorOS 16.0) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6360 மேக்ஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6360 MAX 6nm) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆர்ம் மாலி ஜி57 எம்சி 2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது.

இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.8 எம்எம் தடிமன் கொடுத்துள்ளது. மொத்தமாக 205 கிராம் எடை உள்ளது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) கிடைக்கிறது. மேலும், IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் சர்டிபிகேஷனுடன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி வருகிறது.

யூஎஸ்பி-டைப் சி ஆடியோ கிடைக்கிறது. ஏஐ லிங்ஸ் பூஸ்ட் உள்ளிட்ட வழக்கமாக ஓப்போ பீச்சர்களை பேக் செய்துள்ளது. 6 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் வாரண்டி, 6 வருடங்களுக்கு ஸ்மூத் புரொடெக்சன் கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.38,999ஆக இருக்கிறது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.42,99ஆக இருக்கிறது. மிஸ்ட் பிங்க் (Mist Pink), டைட்டானியம் கிரே (Titanium Grey) மற்றும் வேவ் ப்ளூ (Wave Blue) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. வருகிற அக்டோபர் 11 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

Best Mobiles in India

English summary
OPPO F35 5G With MediaTek Dimensity 6360 MAX Chipset Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X