Home
Mobile

பொளந்து கட்டிய OPPO.. 7000mAh பேட்டரி.. IP69K ரேட்டிங்.. 50MP கேமரா.. ஏப்.15 குறிச்சாச்சு.. எந்த மாடல்?

ஓப்போ நிறுவனத்தின் ஓப்போ எப்33 சீரிஸ் 5ஜி (OPPO F33 Series 5G) ஸ்மார்ட்போன்களின் ஐபி ரேட்டிங், டியூரபிலிட்டி பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. ஏற்கனவே, கேமரா, டிசைன் உள்ளிட்ட பீச்சர்கள் உறுதியாகின. இப்போது, பிரீமியம் மாடல்களுக்கு நிகரான ஐபி ரேட்டிங் கிடைக்க இருப்பதால், எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த ஓப்போ எப்33 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி இந்த ஓப்போ எப்33 சீரிஸ் 5ஜி மாடல்கள் வெளியாக இருக்கின்றன. கேமரா, பேட்டரி மற்றும் டியூரபிலிட்டியில் பக்கா மாடல்களாக இருப்பது தெரிகிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இதில் முக்கிய பீச்சர்கள மற்றும் டிசைன் விவரங்கள் உறுதியாகி இருக்கின்றன. முதலில் டியூரபிலிட்டியை பார்க்கலாம்.

பொளந்து கட்டிய OPPO.. 7000mAh பேட்டரி.. IP69K ரேட்டிங்.. 50MP கேமரா!

IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கிடைக்கிறது. மேலும், IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்டுள்ளன. மார்கெட்டில் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் டாப்-லெவல் ஐபி ரேட்டிங் மொத்தமும் இந்த ஓப்போ எப்33 சீரிஸ் 5ஜி மாடல்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 360 டிகிரி ஆர்மர் பாடி (360° Armour Body) கிடைக்கிறது.

ஏரோஸ்பேஸ் கிரேடு அலுமினியம் அலாய் ஃபிரேம் (Aerospace-grade Aluminum Alloy Frame) கிடைத்துள்ளது. டிஸ்பிளேவுக்கு ஏஜிசி டிடி-ஸ்டார் டி+ (AGC DT-STAR D+) புரொடெக்சன் கிடைக்கிறது. மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டிக்காக கொடுப்படும் எம்ஐ-எஸ்டிடி 810எச் (MIL-STD 810H) சர்டிபிகேஷனை இந்த ஓப்போ எப்33 சீரிஸ் 5ஜி மாடல்கள் கொண்டுள்ளது.

ஷாக் ரெசிஸ்டன்ஸ், டிராப் ரெசிஸ்டன்ஸ், வாட்டர் பிரசர் ரெசிஸ்டன்ஸ் உள்ளிட்ட பல்வேறு டெஸ்ட்கள் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு இந்த எம்ஐ-எஸ்டிடி 810எச் சர்டிபிகேஷன் கொடுக்கப்படும். இவ்வளவு டியூரபிலிட்டி பீச்சர்களுடன் இந்த ஓப்போ எப்33 சீரிஸ் 5ஜி மாடல்கள் வெளியாக இருக்கின்றன. மற்ற பீச்சர்களும் பட்டையை கிளப்புகின்றன.

ஓப்போ எப்33 சீரிஸ் 5ஜி அம்சங்கள் (OPPO F33 Series 5G Specifications): 50 எம்பி ஆட்டோ போகஸ் மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமராவை கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. ஏஐ செல்பீ எக்ஸ்பெர்ட் (AI Selfie Expert) பீச்சர்கள் கிடைக்கின்றன. இதில் மல்டி ஸ்கின் டோன் ஆப்டிமைசேஷன் உள்ளது.

ஸ்மார்ட்-ஆன்டி டிஸ்டோர்ஷன் கிடைக்கிறது. மேலும், ஏஐ போர்ட்ராய்டு க்ளோவ் (AI Portrait Glow), ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0) மற்றும் ஏஐ பாப்அவுட் (AI PopOut) கிடைக்கிறது. கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கிடைக்கிறது. ஆகவே, டூயல் என்ஜின் ஸ்மூத்னஸ் சிஸ்டம் (Dual Engine Smoothness System) கிடைக்கிறது. 6.57 இன்ச் பிளாட் டிஸ்பிளேவை கொடுத்து உள்ளது.

பெரிய 7000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரிக்கு 5 வருடங்களுக்கு ஹெல்த் வாரண்டி கிடைக்கிறது. இந்த 5 வருடங்களுக்கு பிறகும் 80 சதவீத பேட்டரி ஹெல்த் சீராக இருக்கும். 194 கிராம் எடை கொண்டுள்ளது. 80W சூப்பர்வூக் ஃபிளாஷ் சார்ஜிங் (SuperVOOC Flash Charging) கொடுக்கப்பட்டு உள்ளது. மற்ற பீச்சர்கள் விரைவில் தெரியவர இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO F33 Series 5G With IP69K Ratings Military-Grade Durability Confirmed Ahead of India Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X