மார்க்கெட்டே மிரளுது.. 7000mAh பேட்டரி, 80W சார்ஜிங், IP69K, 50MP செல்பீ.. புது OPPO 5ஜி போன்.. எந்த மாடல்?
ஒப்போ (OPPO) நிறுவனம் இந்த ஏப்ரல் மாதத்தில், இந்தியாவில் தனது புதிய எப்-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அவைகள் ஒப்போ எப்33 5ஜி (Oppo F33 5G) மற்றும் ஒப்போ எப் 33 ப்ரோ 5ஜி (Oppo F33 Pro 5G) ஸ்மார்ட்போன்களாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன்கள் குறித்த ஒப்போவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாகவே, ஸ்டாண்டர்ட் ஒப்போ எப்33 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் மற்றும் டிசைன் (Major Specifications and Design) குறித்த விவரங்கள் அமேசானில் "முன்கூட்டியே வெளியிடப்பட்ட ஒரு லிஸ்டிங்" (Premature Amazon listing) வழியாக வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.

அதன் படி ஒப்போ எப்33 5ஜி மாடலில் அமோஎல்இடி (AMOLED) டிஸ்பிளே இடம்பெறும். மேலும் இது 50எம்பிஏ செல்பீ கேமராவுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடன் கூடிய பெரிய 7000mAh பேட்டரி இடம்பெறலாம். ஸ்டோரேஜை பொறுத்தவரை, ஒப்போ எப்33 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் இடம்பெற வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், டிப்ஸ்டர் பேஷனேட்கீக்ஸ் (PassionateGeekz), ஒப்போ எப்33 சீரிஸின் ஒரு போஸ்டரை பகிர்ந்துள்ளார். அதன் வழியாக ஒப்போ எப்33 5ஜி ஸ்மார்ட்போனின் வடிவமைப்பையும் நன்றாக பார்க்க முடிகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் இரண்டு முக்கிய கேமரா ரிங்களுடன் கூடிய ஒரு அகலமான கேமரா மாட்யூல் இருப்பதை பார்க்க முடிகிறது. அதில் ஒன்று 50எம்பி அல்ட்ரா-வைட் கேமராவாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்போ எப்33 சீரிஸ் ரெட் மற்றும் ப்ளூ கலர்களில் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ப்ளூ கலர் வேரியண்ட் ஆனது கீழ் பாதியில் ஒரு பேட்டர்னுடன் கூடிய கிரேடியன்ட் ஃபினிஷ் உடன் வரும் என்பது போல் தெரிகிறது. மேலும் ஒப்போ எப்33 5ஜி மற்றும் ஒப்போ எப்33 ப்ரோ 5ஜி ஆகிய 2 மாடல்களுமே IP69K ரேட்டிங்குடன் வரும் என்றும், அமேசான் வழியாக கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்போ எப்33 சீரிஸ் என்ன விலைக்கு அறிமுகமாகும்? மாடல் பெயர் குறிப்பிடுவது போலவே, இவ்விரு மாடல்களும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமான ஒப்போ எப்31 (OPPO F31) மற்றும் ஒப்போ எப்31 ப்ரோ (OPPO F31 Pro) மாடல்களுக்கு அடுத்தபடியாக வரும் ஸ்மார்ட்போன்களாகும்.
நினைவூட்டும் வண்ணம் ஒப்போ எப்31 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கும், அதே 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் கொண்ட ஒப்போ எப்31 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.26,999 க்கும் அறிமுகமானது. ஆக ஒப்போ எப்33 சீரீஸ் ஆனது ரூ.25,000 முதல் ரூ. 35,000 வரையிலான விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக வெளியான ஒப்போ எப்31 மற்றும் ஒப்போ எப்31 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் மற்ற முக்கிய அம்சங்கள்: இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.5-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளன. இரண்டிலுமே 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் லென்ஸை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது
இந்த இரண்டு மாடல்களிலும் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உடனான 7000mAh பேட்டரி உள்ளது. முக்கிய வேறுபாடாக ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவும், ப்ரோ மாடலில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவும் உள்ளன. மேலும் ஒப்போ எப்31 ப்ரோ, மீடியாடெக் டைமென்சிட்டி 7300 எனர்ஜி சிப்செட்டை கொண்டுள்ளது, அதே சமயம் எப்31 மாடலில் மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட் உள்ளது.


Click it and Unblock the Notifications








