Home
Mobile

ஏப்.29 முதல் SALE பறக்குமே! இவ்ளோ கம்மி விலைக்கு 7000mAh பேட்டரி, IP69, 8GB ரேம் காம்பினேஷன்-ஆ.. கலக்குற OPPO!

ஒப்போ (Oppo) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக ஒப்போ எப்33 5ஜி (Oppo F33 5G) மற்றும் ஒப்போ எப்33 ப்ரோ 5ஜி (Oppo F33 Pro 5G) ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் ஆகின. இதில் ப்ரோ மாடல் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்ட நிலையில், ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் ஒப்போ எப்33 5ஜி மாடலும் விற்பனைக்கு வருகிறது.

முக்கிய அம்சங்கள்: ஒப்போ எப்33 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கடந்த செப்டம்பர் 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஓப்போ எப்31 5ஜி (Oppo F31 5G) ஸ்மார்ட்போனின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் மாடலாகும். இந்த ஸ்மார்ட்போன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.57-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே, புதிய மீடியாடெக் டைமென்சிட்டி 6360 மேக்ஸ் சிப்செட், 8GB வரையிலான ரேம், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP66 + IP68 + IP69 ரேட்டிங் மற்றும் 7,000mAh பேட்டரி ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

இவ்ளோ கம்மி விலைக்கு 7000mAh பேட்டரி, IP69, 8GB ரேம் காம்பினேஷன்-ஆ!

விலை: இந்தியாவில் ஓப்போ எப்33 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.31,999 க்கு வாங்க கிடைக்கும். இதே ஸ்மார்ட்போனின் 8GB + 128GB மற்றும் 8GB + 256GB ஆப்ஷன்கள் முறையே ரூ.34,999 மற்றும் ரூ.37,999 க்கு வாங்க கிடைக்கும்

ஒப்போ எப்33 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் பேர்ல் ஒயிட் ஆகிய இரண்டு வண்ணங்களில் விற்பனை செய்யப்படும். இதை ஒப்போ இந்தியா இணையதளம் (Oppo India Website) மற்றும் ஃபிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்கலாம். நாளை விற்பனை தொடங்கும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் தற்போது முன்பதிவு செய்ய கிடைக்கிறது.

விரிவான அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ+நானோ) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 3 ஓஎஸ்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 397PPI பிக்சல் டென்சிட்டி
- 1400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 6.57-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (1080 x 2372 பிக்சல்கள்) பிளாட் AMOLED டிஸ்பிளே

- AGC DT-STAR D+ ஸ்க்ரீன் ப்ரொடெக்ஷன்
- ஆக்டா-கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 6360 மேக்ஸ் சிப்செட்
- இந்த சிப்செட் மாலி-G57 MC2 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது
- 8ஜிபி வரையிலான LPDDR4x ரேம்
- 256ஜிபி வரையிலான UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- டூயல் ரியர் கேமரா
- எப்/1.8 அபெர்ச்சர் மற்றும் ஆட்டோஃபோகஸ் திறன்களுடன் கூடிய 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா

- எப்/2.4 அபெர்ச்சருடன் கூடிய 2-மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார்
- 16-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 5G, 4G LTE, Wi-Fi 5, புளூடூத் 5.4, GPS, BDS, GLONASS, கலிலியோ, QZSS மற்றும் ஒரு USB டைப்-சி போர்ட்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP66 + IP68 + IP69 ரேட்டிங்
- 80W சூப்பர் வூக் (SuperVOOC) வயர்டு அதிவேக சார்ஜிங் வசதி
- 7,000mAh பேட்டரி
- அளவீட்டில் 158.2x78.0x8.0 மிமீ
- எடையில் 189 கிராம்

Best Mobiles in India

English summary
Oppo F33 5G India Sale Starting Tomorrow April 29 Check Out Price Full Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X