Home
Mobile

OPPO ஒரே போடு.. 7000mAh பேட்டரி உடன் 2 புது போன்கள்.. வேற எந்த போனும் வாங்கிடாதீங்க!

ஒப்போ (Oppo) நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் தான் அதன் மிட்-ரேன்ஜ் சீரிஸ் ஆன ஒப்போ எப்29 சீரீஸை (Oppo F29 Series) வெளியிட்டது. ஆனால் அதற்குள் ஒப்போ நிறுவனத்தின் அடுத்த எப் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் குறித்த விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன

அது ஒப்போ எப்31 சீரீஸ் (Oppo F31 Series) ஸ்மார்ட்போன்கள் ஆகும். இதன்கீழ் ஒப்போ எப்31 மற்றும் ஒப்போ எப்31 ப்ரோ என 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் அவற்றின் "முன்னோடியை" போலவே அதே ஐபி68 மற்றும் ஐபி69 ரேட்டிங்களையும், "அடுத்த நிலை நீடித்துழைப்பு" (Next Level Durability) என்ற டேக்லைனையும் கொண்டிருக்கும் என்று வதந்தி பரவியுள்ளது.

7000mAh பேட்டரி உடன் 2 புது போன்கள்!

மேலும் ஒரு புதிய கசிவு, இந்த ஸ்மார்ட்போன்கள் மிகப்பெரிய 7000mAh பேட்டரிகளுடன் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கிறது. இந்தத் தகவல் @passionategeekz வழியாக கிடைத்துள்ளது. குறிப்பிட்ட டிப்ஸ்டரின் கூற்றுப்படி ஒப்போவின் எப்31 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது அடுத்த மாதம் (செப்டம்பர் மாதம்) இந்தியாவில் அறிமுகமாகும்.

கேமராக்களை பொறுத்தவரை ஒப்போ எப்31 சீரீஸ் ஆனது முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட எப்29 மாடல்களுடன் ஒப்பிடும்போது பெரிய அளவிலான முன்னேற்றங்களை கொண்டுவராது. அதற்கு பதிலாக (முன்னரே குறிப்பிட்டபடி), ஒப்போ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் நீடித்துழைப்பில் கவனம் செலுத்துவதாக தெரிகிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் 360-டிகிரி ஆர்மர் பாடி பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட நெட்வொர்க் செயல்திறனை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

எப்31 சீரீஸின் கீழ் மட்டுமே 7000mAh பேட்டரி உடன் வரும் மாடல்களை கொண்டுவர ஒப்போ திட்டமிடவில்லை. ஒப்போ நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனது ஒரு பேட்டரி பவர்ஹவுஸ் ஆக இருக்கலாம் என்றும், அது 7000எம்ஏஎச் டூயல்-செல் பேட்டரி உடன் வரலாம் என்றும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. அது ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா (Oppo Find X9 Ultra) ஸ்மார்ட்போன் ஆகும்

டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Tipster Digital Chat Station) வழியாக கிடைத்த தகவலின்படி, ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 6850mAh (ஒவ்வொன்றும் 3425mAh) என மதிப்பிடப்பட்ட டூயல் செல் அமைப்பை பயன்படுத்தும். ஆக இது 7000mAh என சந்தைப்படுத்தப்படலாம்.

இது ஒப்போ பைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் நாம் பார்த்த வழக்கமான 6100mAh பேட்டரி உடன்ஒப்பிடும் போது நல்ல மேம்பாடு ஆகும். மேலும் ஒப்போ நிறுவனம் இதில் 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை சேர்ப்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 2கே பிளஸ் ரெசல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.82 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

சிப்செட்டை பொறுத்தவரை இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட் கொண்டு இயங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட கலர்ஓஎஸ் 16 உடன் வரலாம். நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி 68 / ஐபி 69 ரேட்டிங்கை பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 200எம்பி ப்ரைமரி சென்சார், 50எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 10எக்ஸ் ஆப்டிகல் ஜூம் வரை கொண்ட டூயல் பெரிஸ்கோப் ஜூம் லென்ஸ்கள் (200எம்பி மற்றும் 50எம்பி) இடம்பெறலாம். செல்பீ கேமரா குறித்த விவரங்கள் இல்லை. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி குறித்த தகவல் கிடைத்தால்,. அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO F31 OPPO F31 Pro To Pack Big 7000mAh Battery India Launch on September 2025 Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X