Home
Mobile

2025 செப்டம்பரில் இந்த 3 போன்கள் தான் ராஜா.. வெவ்வேறு விலையில் 7000mAh பேட்டரி உடன் 3 புதிய போன்கள்!

ஒப்போ (Oppo) நிறுவனத்தின் அடுத்த எப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகத்திற்கு தயார் ஆக உள்ளன. ஆனால் இம்முறை அது ஒப்போ எப்30 சீரீஸ் (Oppo F30 Series) என்று அழைக்கப்படாது. அதற்கு பதிலாக, ஒப்போ நிறுவனம் நேரடியாக எப்31 சீரீஸை (Oppo F31 Series) அறிமுகம் செய்ய உள்ளது.

இந்தியாவில் ஒப்போ எப்31 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் எப்போது அறிமுகம் (Oppo F31 Series India Launch Date) ஆகும்? ஒப்போ எப்31 சீரிஸின் கீழ் மொத்தம் எத்தனை மாடல்கள் வெளியாகும்? அவைகள் என்னென்ன அம்சங்களை (Oppo F31 Series Specifications) பேக் செய்யும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

வெவ்வேறு விலையில் 7000mAh பேட்டரி உடன் 3 புதிய OPPO போன்கள்!

ஒப்போ எப்31 சீரீஸின் கீழ் எத்தனை மாடல்கள் வெளியாகும்? எக்ஸ் தளத்தில் டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் பகிர்ந்து உள்ள தகவலின் படி, நாம் எதிர்பார்க்கும்படி ஒப்போ எப்31 சீரீஸில் 2 மாடல்கள் மட்டுமே இல்லாமல் மொத்தம் 3 மடல்கள் இருக்கும்: ஒரு வெண்ணிலா மாடல்; ஒரு ப்ரோ மாடல் மற்றும் ஒரு ப்ரோ பிளஸ் மாடல்.

அதாவது இந்த சீரிஸின்கீழ் வெண்ணிலா ஒப்போ எப்31 (Oppo F31), ஒப்போ எப்31 ப்ரோ (Oppo F31 Pro) மற்றும் ஒப்போ எப்31 ப்ரோ பிளஸ் (Oppo F31 Pro Plus) என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த மூன்றும் முறையே ரூ.25,000-க்கு அருகிலான பட்ஜெட்டில், ரூ.30,000-க்குள் என்கிற பட்ஜெட்டில், ரூ.30,000-க்கு மேல் என்கிற பட்ஜெட்டில் அறிமுமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ எப்31, ஒப்போ எப்31 ப்ரோ, ஒப்போ எப்31 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ஒப்போ எப்31 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்டால் இயக்கப்படும் என்றும் 80W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல், ஒப்போ எப்31 ப்ரோவும் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட்டை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது, மேலும் வெண்ணிலா மாடலின் அதே பேட்டரி மற்றும் சார்ஜிங் திறன்களை கொண்டிருக்கும். ஹை எண்ட் ஒப்போ எப்31 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது இந்த சீரீஸின் தனித்துவமான மாடலாக இருக்கலாம். உடன் அறிமுகமாகும் மாடல்களை போலல்லாமல், இந்த ஸ்மார்ட்போன் ஒரு பிளாட் ஆன டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்.

ப்ரோ பிளஸ் மாடல் ஆனது பெரும்பாலும் அதன் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் நடைமுறை பயன்பாட்டில் அதிக கவனம் செலுத்தலாம். மிக முக்கியமாக, இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்படும். மேலே நாம் கண்டா அதே பேட்டரி அளவு மற்றும் அதே சார்ஜிங் ஸ் ஸ்பீட் உடன் வரலாம்.

ஒப்போ எப்31, ஒப்போ எப்31 ப்ரோ, ஒப்போ எப்31 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் எப்போது அறிமுகமாகும்? அறிமுகத்தை பொறுத்தவரை, இந்தியர்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை என்று தெரிகிறது. ஒப்போ எப்31 சீரீஸ் ஆனது வருகிற 2025 செப்டம்பர் நடுப்பகுதியில் அறிமுகம் செய்யப்படலாம். சாத்தியமான வெளியீட்டு தேதிகள் செப்டம்பர் 12 அல்லது செப்டம்பர் 14 ஆக இருக்கலாம்.

தற்போது வரை ஒப்போ நிறுவனம் அதன் ஒப்போ ஏ31 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை டீஸ் செய்யவில்லை. மேலும் உடனடி வெளியீட்டை குறிக்கும் சான்றிதழ் பட்டியல்கள் கூட எதுவும் இல்லை. இருப்பினும், பல ஆதாரங்களில் இருந்து லீக்ஸ் வருவதால், வரும் வாரங்களில் ஒப்போ நிறுவனம் திடீரென அதன் ஒப்போ எப்31 சீரீஸ் பற்றி பேசத் தொடங்கினால் - ஆச்சரியப்படுவதற்கில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo F31 Oppo F31 Pro Oppo F31 Pro Plus with 7000mAh Battery India Launch on September 12 or 14 Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X