Home
Mobile

முரட்டு சம்பவம் லோடிங்.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. OIS கேமரா.. 80W சார்ஜிங்.. புது OPPO 5ஜி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ஓப்போ எப்31 (OPPO F31) மற்றும் ஓப்போ எப்31 ப்ரோ (OPPO F31 Pro) ஆகிய மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. 7000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட மாடல்களாக இருக்கின்றன. இந்த ஓப்போ மாடல்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஓப்போ எப்31 அம்சங்கள் (OPPO F31 Specifications):
இந்த ஓப்போ போனில் 6.57 இன்ச் (2372 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் ரெசொலூஷன் (FHD+), 120Hz ரெஃரெஷ் ரேட் மற்றும் 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் டிடி ஸ்டார் டிபிளஸ் புரொடெக்சன் கிடைக்கிறது.

முரட்டு சம்பவம் லோடிங்.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. OIS கேமரா மாடல்!

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எனர்ஜி 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 Energy 6nm) சிப்செட் கிடைக்கிறது. கலர்ஓஎஸ் 15.0 (ColorOS 15.0) கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஓவி50டி40 (OV50D40) சென்சார் கிடைக்கிறது.

டெப்த் கேமராவில் கேலக்ஸிகோர் 02எம்1பி (Galaxy Core 02M1B) சென்சார் கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சாருடன் 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7000mAh பேட்டரி கிடைக்கிறது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது.

ஓப்போ எப்31 ப்ரோ அம்சங்கள் (OPPO F31 Pro Specifications):
6.57 இன்ச் (2372 x 1080 பி்க்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கும் டிடி ஸ்டார் டிபிளஸ் புரொடெக்சன் கிடைக்கிறது. அதேபோல 120Hz ரெஃப்ரெஷ் ரேட், ஃபுல்எச்டிபிளஸ் ரெசொலூஷன் மற்றும் 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் டிசிஐ பி3 கலர் காமட் உள்ளது.

இதில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் பேஸ்டு கலர்ஓஎஸ் 15.0 கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Energy 4nm) சிப்செட் கிடைக்கிறது. ஓவி50டி40 சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் கேலக்ஸி கோர் சென்சாருடன் 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது.

32 எம்பி செல்பீ கேமராவிலும் கேலக்ஸிகோர் சென்சார் உள்ளது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7000mAh பேட்டரி கிடைக்கிறது. MIL-STD-810H சர்டிபிகேஷன் கிடைக்கிறது. மற்ற பீச்சர்கள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.

ஓப்போ எப்31 விலை (OPPO F31 Price):
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.22,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,999ஆகவும் இருக்கிறது. மிட்நைட் ப்ளூ (Midnight Blue), கிளவுட் கிரீன் (Cloud Green) மற்றும் ப்ளூம் ரெட் (Bloom Red) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. செப்டம்பர் 19ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது.

ஓப்போ எப்31 ப்ரோ விலை (OPPO F31 Pro Price):
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.28,999ஆகவும் இருக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் +_256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.30,999ஆக இருக்கிறது. டெசர்ட் கோல்டு (Desert Gold) மற்றும் ஸ்பேஸ் கிரே (Space Grey) கலர்களில் வருகிறது. அமேசான் விற்பனையில் கிடைக்க இருக்கிறது. செப்டம்பர் 27ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது.

Best Mobiles in India

English summary
OPPO F31 F31 Pro With 50MP Camera 7000mAh Battery Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X