இப்படி இருக்கனும் ரேட்டு.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 80W சார்ஜிங்.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
ஓப்போ நிறுவனத்தின் அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடலாக இருக்கும் ஓப்போ எப்31 5ஜி (OPPO F31 5G) ஸ்மார்ட்போனுக்கு பேங்க் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்படுகிறது. இப்போது, ஆர்டர் செய்தால், கம்மி விலைக்கு வாங்கி கொள்ளலாம். பேட்டரி மட்டுமல்லாமல், ஃபாஸ்ட் சார்ஜிங், ஐபி ரேட்டிங் மற்றும் டிஸ்பிளேவிலும் இந்த ஓப்போ எப்31 5ஜி ஸ்மார்ட்போன் பட்டையை கிளப்புகிறது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,500 பேங்க் தள்ளுபடி மற்றும் ரூ.2,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் போக விற்பனைக்கு கிடைக்கிறது. பேங்க் தள்ளுபடியுடன் வாங்கினால், ரூ.21,499 பட்ஜெட்டில் வாங்கலாம். எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு இந்த தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

பிரீமியம் டிசைனில் மிட்நைட் ப்ளூ (Midnight Blue), கிளவுட் கிரீன் (Cloud Green) மற்றும் ப்ளூம் ரெட் (Bloom Red) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மட்டுல்லாமல், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது. இதற்கும் ரூ.1,500 பேங்க் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.
இந்த வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது. பேங்க் தள்ளுபடி போக ரூ.23,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். பெரிய பேட்டரி கொடுக்கும் ஸ்மார்ட்போன்களில் டியூரபிலிட்டி பீச்சர்கள் அவ்வளவாக இருக்காது. ஆனால், இந்த ஓப்போ எப்31 5ஜி ஸ்மார்ட்போனில் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷன் கிடைக்கிறது.
ஓப்போ எப்31 5ஜி அம்சங்கள் (OPPO F31 5G Specifications): இந்த ஓப்போ ஸ்மார்ட்போனில் 6.57 இன்ச் (2372 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.
முன்பு பார்த்த எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் மிலிட்டரி கிரேடு மட்டுமல்லாமல், டிஸ்பிளேவுக்கு மட்டும் டிடி ஸ்டார் டிபிளஸ் (DT Star D+) புரொடெக்சன் கிடைக்கிறது. இதுபோக அண்டர்வாட்டர் போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி கொடுக்கும்படி டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆகவே, IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கிடைக்கிறது. இந்த ஓப்போ எப்31 5ஜி மாடலில் ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எனர்ஜி (Octa Core 6nm MediaTek Dimensity 6300 Energy) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு ஆர்ம் மாலி ஜி57 ஜிபியு (Arm Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு கலர்ஓஎஸ் 15.0 (ColorOS 15.0) வருகிறது. 2 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்களை பெற்று கொள்ளலாம். 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் கிடைக்கும். மேலும், டூயல்-என்ஜின் ஸ்மூத்னஸ் ரெண்டரிங் என்ஜின் மற்றும் டிரிட்டி என்ஜின் சப்போர்ட் கிடைக்கிறது. டூயல் கேமரா சிஸ்டம் உள்ளது.
ஆகவே, ஓவி50டி40 சென்சாரும், ஓஐஎஸ் டெக்னாலஜியும் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + கேலக்ஸி கோர் சென்சாருடன் 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்480 சென்சாருடன் 16 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7000mAh பேட்டரி கிடைக்கிறது. ஹை-ரெஸ் ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








