Home
Mobile

நாளை இந்தியாவில் களமிறங்கும் புதிய Oppo 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?

மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஒப்போ எப்31 5ஜி, ஒப்போ எப்31 ப்ரோ 5ஜி, ஒப்போ எப்31 ப்ரோ பிளஸ் 5ஜி உள்ளிட்ட போன்களை நாளை (செப்டம்பர் 15) இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது ஒப்போ நிறுவனம். குறிப்பாக அசத்தலான வடிவமைப்புடன் மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும். இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு ஒப்போ எப்31 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஒப்போ எப்31 5ஜி அம்சங்கள் (Oppo F31 5G Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் வசதியுடன் இந்த புதிய ஒப்போ எப்31 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

நாளை இந்தியாவில் களமிறங்கும் புதிய Oppo 5ஜி போன்..  எந்த மாடல்?

அதேபோல் 6.53-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது ஒப்போ எப்31 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா பிளாஸ் பாதுகாப்பு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் பல சிறப்பான வசதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் ஒப்போ எப்31 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

ஒப்போ எப்31 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புட அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

IP68 & IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் ஒப்போ எப்31 5ஜி போன் அறிமுகமாகும். யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. பின்பு இந்த போன் சிறந்த ஆடிஆயா அனுபவத்தை வழங்கும்.

அதுவும் 7000mAh பேட்டரி உடன் ஒப்போ எப்31 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்க நினைக்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒப்போ போனில் உள்ளன. மேலும் ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, ஒப்போ எப்31 5ஜி ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Oppo F31 5G will be launched in India tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X