செப்டம்பர் 15 வருகிறது புதிய ஒப்போ 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ எப்31 5ஜி சீரிஸ் (Oppo F31 5G series) ஸ்மார்ட்போன்களை வரும் செப்டம்பர் 15-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது ஒப்போ எப்31 5ஜி, ஒப்போ எப்31 ப்ரோ 5ஜி மற்றும் ஓப்போ எப்31 ப்ரோ பிளஸ் 5ஜி போன்கள் தான் அறிமுகம் செய்யப்பட உள்ளன. குறிப்பாக இந்த போன்கள் தரமான சிப்செட் மற்றும் அசத்தலான வடிவமைப்புடன் வெளிவரும்.
இந்நிலையில் ஒப்போ எப்31 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒப்போ எப்31 5ஜி அம்சங்கள் (Oppo F31 5G Specifications): 6.53-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது ஒப்போ எப்31 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா பிளாஸ் பாதுகாப்பு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் பல சிறப்பான வசதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் வசதியுடன் இந்த புதிய ஒப்போ எப்31 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் ஒப்போ எப்31 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஒப்போ எப்31 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
7000mAh பேட்டரி உடன் ஒப்போ எப்31 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்க நினைக்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
IP68 & IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant)உடன் ஒப்போ எப்31 5ஜி போன் அறிமுகமாகும். பின்பு இந்த புதிய ஒப்போ எப்31 5ஜி போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
ஒப்போ எப்31 ப்ரோ பிளஸ் அம்சங்கள்: 6.79-இன்ச் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட், 7000mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்,IP68 & IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications