புதிய ரோஸ் கோல்ட் மாறுபாட்டில் ஒப்போ எப்3 (விலை & அம்சங்கள்).!

இந்திய இளைஞர்களை குறிவைத்து வெளியிடப்பட்டுள்ள இந்த மாதிரியின் அம்சங்களை பொறுத்தமட்டில் அதன் வன்பொருள் துறையில் நிலையான ஸ்மார்ட்போன் கொண்டுள்ள அதே அம்சங்கள் கொண்டுள்ளது.

|

ஒப்போ நிறுவனம் அதன் எப்3 ஸ்மார்ட்போனின் ஒரு புதிய ரோஸ் கோல்ட் நிற மாறுபாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.19,990/- ஏன விலை நிர்ணயம் கொண்டுள்ள இந்த சாதனம் ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் விற்பனைக்கு கிடக்கிறது. ஆனால் இக்கருவி ஆஃப்லைனில் எப்போது கிடைக்குமென்ற தகவல்கள் இல்லை.

புதிய ரோஸ் கோல்ட் மாறுபாட்டில் ஒப்போ எப்3 (விலை & அம்சங்கள்).!

ஒப்போ எப்3 ரோஸ் கோல்ட் பதிப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம், எங்கள் இந்திய நுகர்வோர்கள், நேர்த்தியான வடிவமைப்பு, புதுமையான கேமரா தொழில்நுட்பத்தை சந்திப்பதை நோக்கமாக கொண்டுள்ளோம்" என்று வில் யங் (பிராண்ட் இயக்குனர், ஓப்போ இந்தியா) தெரிவித்துள்ளார்.

இந்திய இளைஞர்களை குறிவைத்து வெளியிடப்பட்டுள்ள இந்த மாதிரியின் அம்சங்களை பொறுத்தமட்டில் அதன் வன்பொருள் துறையில் நிலையான ஸ்மார்ட்போன் கொண்டுள்ள அதே அம்சங்கள் கொண்டுள்ளது.

அதாவது, ஒரு நிலையான கேமராவுடன், ஒரு 120 டிகிரி அகலக் கோண கேமரா கொண்ட அதே இரட்டை கேமரா அமைப்பை வழங்குகிறது. பின்புறத்தில் 13எம்பி முதன்மை கேமரா கொண்டுள்ள இந்த சாதனம் 5.5 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே மற்றும் 4ஜிபி ரேம் உடனான மீடியா டெக் எம்டி6750டி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. ஒரு 3200எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் இந்த சாதனம் 64ஜிபி உள் சேமிப்பை வழங்குகிறது.

சில மாதங்களுக்கு முன்பு ஒப்போ எப்3 ஸ்மார்ட்போனின் ஒரு கருப்பு வண்ண மாறுபாட்டை நிறுவனம் அறிமுகப்படுத்தியது. கருவியின் பெயர் பரிந்துரைக்கும் படி, அந்த சாதனம் ஸ்மார்ட்போன் ஒரு ஆல் பிளாக் பதிப்பாக திகழ்கிறது. ஒரு வரம்புக்குட்பட்ட பதிப்பான இது ஒரு பிசிசிஐ லிமிடெட் பதிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Oppo F3 Rose Gold colour variant launched at Rs 19,990. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X