பார்ப்பவர்களை "வாவ்" என வாய் பிளக்க வைக்கும் - எப்3 ப்ளஸ்.!

Written By:

என்ன அம்சங்கள் கொண்டிருக்கிறது என்பதையெல்லாம் பாராமல் பட்ஜெட் விலைக்கு எது கிடைக்கிறதோ அதை வாங்கிய காலமெல்லாம் மலையேறி விட்டது. இப்போது ஒவ்வொரு பயனரும் ஒரு ஸ்மார்ட்போன் வல்லுநருக்கு சமம்.

பார்ப்பவர்களை

அந்த அளவிலான என்ன டிஸ்ப்ளே.? என்னென்னெ அம்சங்கள் கொண்டுள்ளது.? என்பதை தீர்க்கமாக ஆராய்ந்து வாங்கும் நுகர்வோர்களை கொண்ட காலாமிதில் எந்தவொரு நிறுவனத்தினால் எந்தவொரு பயனரையும் அவ்வளவு சுலபமாக ஏமாற்றி விட இயலாது.

ரூ,10,000/- அல்லது ரூ.20,000/- என ஒரு குறிப்பிட்ட அளவிலான பட்ஜெட் கருவிகள் ங்எல்லாமே கிட்டத்தட்ட ஒரே அளவிலான அம்சங்களை தான் கொண்டுள்ளது - இது நுகர்வோர்களின் அம்சங்கள் சார்ந்த அறிவினால் ஏற்பட்ட ஒரு விளைவாகும் என்பதில் சந்தேகமேயில்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பிரீமியம் வடிவமைப்பின் உண்மையான ஆதாரம்

பிரீமியம் வடிவமைப்பின் உண்மையான ஆதாரம்

இனி ஒரு ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமெனில் நாம் முதலில் கூர்ந்து கவனிக்க வேண்டியது அக்கருவி பிரீமியம் வடிவமைப்பு கொண்டுள்ளதா என்பதை தான் - அப்படியாக பார்ப்பவர்களை "வாவ்" என் வாய் பிளக்க வைக்கும் பிரீமியம் வடிவமைப்பின் உண்மையான ஆதாரமாக திகழும் கருவிகளில் ஒன்று தான் - எப்3 ப்ளஸ்.!

மென்மையான உலோக மேற்பரப்பு

மென்மையான உலோக மேற்பரப்பு

நீண்ட ஆயுளை பெறும்வண்ணம் இந்த உயர் பிரீமியம் கருவியானது ஒரு உலோக யூனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ளது மற்றும் மிகவும் கவனமான ஒரு மென்மையான உலோக மேற்பரப்பையும் வழங்குகிறது அதேசமயம் கைகளில் தேவையான பிடிமானத்தையும் வழங்குகிறது.

கொரில்லா கிளாஸ் 5

கொரில்லா கிளாஸ் 5

கைபேசியின் பின்பகுதி ஒரு உயர் வலிமை மெட்டல் வடிவமைப்பு கொண்டிருக்க இதுவொரு ஒரு 6 அங்குல 2.5டி கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்ட திரையால் முன்பக்கம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கைப்பேசியின் வலது மற்றும் இடது பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் வன்பொருள் பொத்தான்களும் உலோகத்தால் செய்யப்பட்டுளளது.

கைகளில் பருமனான உணரப்படவில்லை

கைகளில் பருமனான உணரப்படவில்லை

இக்கருவியின் முக்கியமான வடிவமைப்பு அம்சமாக அதன் பெரிய 6 அங்குல திரை திகழ்கிறது. ஒரு மாபெரும் 6 அங்குல திரை கொண்டிருக்கும் போதும் இக்கருவி கைகளில் பருமனான உணரப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் முந்தைய தலைமுறைகளைச் விட சிறந்த பிடிமானம் வழங்குகிறதுமுக்கியமாக பணிச்சூழலியல் நிறைந்த இடங்களில் உங்கள் கைகளை விட்டு இக்கருவி நழுவுவது அவ்வளவு எளிதல்ல.

'சிக்ஸ்-ஸ்ட்ரிங்' அல்ட்ரா ஆண்டெனா

'சிக்ஸ்-ஸ்ட்ரிங்' அல்ட்ரா ஆண்டெனா

பிற தடித்த வெள்ளை ஆண்டெனா பட்டைகள் கொண்ட உலோக கைபேசிகள் போல் இல்லாவிட்டாலும் கூட ஒப்போ எப்3 ப்ளஸ் இணைப்பு அம்சங்களில் வடிவமைப்பிற்காக எந்த தியாகமும் செய்யவில்லை. அதற்கு இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ள 'சிக்ஸ்-ஸ்ட்ரிங்' அல்ட்ரா ஆண்டெனா தான் உதாரணம். அது ஒரு பிரீமியம் தோற்றத்தை கொடுத்து ஷெல் கொண்டு கலப்புகளையும் வழங்குகிறது. உடன் அது மிகவும் மென்மையாய் தெரிகிறது என்பது இன்னும் சிறப்பான வடிவமைப்பு விடயங்களில் ஒன்றாகும்.

கைரேகை சென்சார்

கைரேகை சென்சார்

இக்கருவியின் மற்றொரு முக்கியமான வடிவமைப்பு அம்சமாக வெறும் 0.2 நொடியில் கைபேசியை திறக்கும் கைரேகை சென்சார் ஒருங்கிணைப்பு தான் மற்றும் இந்த் சாதனத்தின் பாதுகாப்பை அதிகரிக்கும் வண்ணம் கூடுதல் பாதுகாப்பு அடுக்கு கொண்ட அமைப்பை ஹோம் பொத்தானில் உள்ள கைரேகை ஸ்கேனரில் ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும்.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

இந்த அணைத்து வடிவமைப்பு அம்சங்களையும் ஒன்றாக்கி பார்க்கும் போது ஒப்போ எப்3 ப்ளஸ் நடைமுறையில் சிறந்த கருவியாகும் என்பதில் சந்தகமேயில்லை. இந்த சமீபத்திய ஒப்போ எப்3 ப்ளஸ் கருவியானது 6 அங்குல ப்ஹாப்ளெட் ஆகும் மற்றும் டூவல் செல்பீ கேமரா கொண்டு வெளிவரும் முதல் மொபைல் சாதனமாகும். ஒப்போ செல்பீ எக்ஸ்பெர்ட் குடும்பத்தின் மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒரு கருவியான இந்த எப்3 ப்ளஸ் கருவி இந்திய சந்தையில் ரூ.30,990/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
OPPO F3 Plus is the true example of premium craftsmanship. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot