டூவல் கேம், 4ஜிபி ரேம் கொண்ட எப்3 ப்ளஸ் (விலை, அம்சங்கள்).!
முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என இரண்டு கேமாரவிலும் சரி சமமான திறன்களை கொண்ட ஒரு தகுதியான கருவி.!
நாம் அனைவருமே செல்பீகள் எடுக்க பேரார்வம் கொண்டவர்கள் என்பதை மறுக்க இயலாது. குறிப்பாக சமூக வலைப்பின்னல் தளங்களில் மிகவும் பைத்தியகாரத்தனமான மற்றும் சுவாரஸ்யமான தருணங்களை ஒரு செல்பீயின் வழியே உலகளாவிய வண்ணம் பதிவிடும் நமக்கு அதிக அளவிலான மெகா பிக்சல்கள் கொண்ட செல்பீ கேமரா மீது தனி ஆர்வம் எழுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
அதனால் பின்பக்க கேமராக்கள் மீதான ஆர்வம் குறைந்துவிட்டது என்று அர்த்தமில்லை. செல்பீக்களுக்கு இணையாக ரியர் கேமராக்கள் மீதும் பயனர்களின் கவனம் அதிகமாகவேத்தான் உள்ளது. அப்படியாக, முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என இரண்டு கேமாரவிலும் சரி சமமான திறன்களை கொண்ட ஒரு தகுதியான கருவி தான் - ஒப்போ எப்3 ப்ளஸ்.!

காட்சி
ஒப்போ எப்3 ப்ளஸ் ஸ்மார்ட்போன் ஆனது மார்ச் 2017-ல் தொடங்கப்பட்ட ஒரு தொலைபேசியாகும். 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஒரு 6.00 அங்குல தொடுதிரை காட்சி கொண்டுள்ள இக்கருவி இந்தியாவில் ரூ. 30,990/- என்ற விலை நிர்ணயம் கொண்டு அறிமுகமாகியுள்ளது.

ரேம்
1.95ஜிகாஹெர்ட்ஸ் அக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 652 செயலி மூலம் இயக்கப்படும் இந்த கருவி 4ஜிபி ரேம் மற்றும் மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 256ஜிபி நீட்டிக்கக்கூடிய ஆதரவு உடன் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பும் கொண்டுள்ளது.

கேமரா
இக்கருவிகள் சிறப்பம்சங்களான கேமராக்களை பொறுத்தவரை, ஒப்போ எப்3 ப்ளஸ் கருவி 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் செல்பீகளுக்கான ஒரு 16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது.

பேட்டரி
ஆண்ட்ராய்டு 6.0 கொண்டு இயங்கும் ஒப்போ எப்3 ப்ளஸ் கருவியானது ஒரு 4000எம்ஏஎச் நீக்கமுடியாத பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. அளவீடுகளில் 163.63X 80.80X 7.35 (உயரம் x அகலம் x தடிமன்) மற்றும் 185.00 கிராம் எடை கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு
ஒரு இரட்டை சிம் (ஜிஎஸ்எம் மற்றும் ஜிஎஸ்எம்) நானோ சிம் மற்றும் நானோ சிம் ஆதரவு கொண்ட இக்கருவியின் இணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில் வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், யுஎஸ்பி ஓடிஜி, 3ஜி மற்றும் 4ஜி ஆகியவைகள் அடங்கும்.

சென்சார்
உடன் இந்த தொலைபேசியில் சென்சார்களை பொறுத்தமட்டில் காம்பஸ் மேக்நேட்டோமீட்டர், பிராக்ஸிமிட்டி சென்சார், ஆக்சலேரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார் மற்றும் கைரோமீட்டர்.

மேலும் படிக்க
"நோக்கியா பாணியில்" எல்ஜி ஸ்டைலஸ் 3 (விலை, அம்சங்கள்) அறிமுகம்.!


Click it and Unblock the Notifications