ரூ.6000 விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் ஒப்போ எப்3 பிளஸ்.!
ஓப்போ எப்3 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் 1920 x 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒப்போ எப்3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு பிளிப்கார்ட் வழியே விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு
இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இஎம்ஐ வசதி மற்றும் எக்சேஞ்ஜ் வசதி உள்ளிட்டவை இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்போ எப்3 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை சிறந்த கேமரா அமைப்பு மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது,
அதன்பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது.

விலைகுறைப்பு:
ஒப்போ எப்3 பிளஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.22,990-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.6000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.16,990-க்கு
விற்பனை செய்யப்படுகிறது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

6-இன்ச் டிஸ்பிளே:
ஓப்போ எப்3 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் 1920 x 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

குவால்காம்:
ஓப்போ எப்3 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 653 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்
ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

6ஜிபி ரேம்:
இந்த சாதனம் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் 256ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஓப்போ எப்3 பிளஸ் ஸ்மார்ட்போன்.

செல்பீ கேமரா:
இந்த ஸ்மார்ட்போனின் டூயல் செல்பீ கேமரா 16மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, மேலும் 8மெகாபிக்சல் சென்சார் இவற்றுள்
அடக்கம், 120டிகிரி வைட் ஆங்கில் லென்ஸ் பொறுத்தப்பட்டுள்ளது. அதன்பின் எப்3 பிளஸ் ரியர் கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
டூயல்-சிம், வைபை 802.11, ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. ஓப்போ எப்3 பிளஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications