Home
Mobile

விலைகுறைப்புடன் ஒப்போ எப்3 தீபாவளி எடிஷன் அறிமுகம்.!

இந்த பிராண்ட் கடந்த ஆண்டு தீபாவளி எடிஷன் பதிப்பில் அதன் ஒப்போ எப்1 ஸ்மார்ட்போனை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

By Muthuraj

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒப்போ, இன்று தனது ஒப்போ எப்3 தீபாவளி எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அசல் ஒப்போ எப்3 ஆனது கடந்த மே மாதம் ரூ.19,990/-க்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

விலைகுறைப்புடன் ஒப்போ எப்3 தீபாவளி எடிஷன் அறிமுகம்.!

சிவப்பு நிறத்தில் தற்போது வெளியாகியுள்ள ஒப்போ எப்3 தீபாவளி எடிஷன் ஆனது ஒரு பிரத்யேக மட்டுப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும். இந்த புதிய பதிப்பு பண்டிகை கருப்பொருள்கள் மற்றும் வால்பேப்பர்கள் கொண்டு ஏற்றப்பட்ட வருகிறது. இந்த சமீபத்திய ஸ்மார்ட்போனை வாங்குவதன் மூலம் பயனர்கள் கிரிக்கெட் பேட் ஒன்றையும் பெறலாம்.

அமேசான் மற்றும் ஓப்போ ஸ்டோர்களில்

அமேசான் மற்றும் ஓப்போ ஸ்டோர்களில்

இந்த லிமிடெட் ஒப்போ எப்3 பதிப்பானது, இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் மற்றும் ஓப்போ ஸ்டோர்களில் கிடைக்கும். செப்டம்பர் 29-முதல் இந்த ஸ்மார்ட்போன் கொள்முதல் செய்யப்படும். இந்த பிராண்ட் கடந்த ஆண்டு தீபாவளி எடிஷன் பதிப்பில் அதன் ஒப்போ எப்1 ஸ்மார்ட்போனை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

5.5 அங்குல முழு எச்டி

5.5 அங்குல முழு எச்டி

ஒப்போ எப்3 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில், கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்பு, 1920 x 1080 பிக்சல்கள் என்ற திரை தீர்மானம் கொண்ட ஒரு 5.5 அங்குல முழு எச்டி 2.5டி வளைந்த கண்ணாடி டிஸ்பிளே கொண்டுள்ளது.

4 ஜிபி ரேம்

4 ஜிபி ரேம்

மேலும் இந்த சாதனம் மாலி டி860-எம்பி2 உடன் 1.5ஜிகாஹெர்ட்ஸ் உடனான ஆக்டா-கோர் மீடியாடெக் எம்டி6750டி செயலி மூலம் இயக்கப்படுகிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட இக்கருவி மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கும் ஆதரவும் வழங்குகிறது.

கலர்யூஐ 3.0

கலர்யூஐ 3.0

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ அடிப்படையிலான நிறுவனத்தின் கலர்யூஐ 3.0 கொண்டு இயங்கும் இந்த சாதனம் 3200எம்ஏஎச் நீக்கமுடியாத பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

120 டிகிரி பரந்த-கோண லென்ஸ்

120 டிகிரி பரந்த-கோண லென்ஸ்

ஒப்போ எப்3 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தமட்டில், இக்கருவி ஒரு இரட்டை முன்பக்க கேமரா அமைப்புடன் வருகிறது. 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 8-மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் க்ரூப்பீகளுக்கான 120 டிகிரி பரந்த-கோண லென்ஸ் கொண்டுள்ளது.

முழு எச்டி 1080பி வீடியோ

முழு எச்டி 1080பி வீடியோ

ரூ.18990/- என்ற விலை நிர்ணயம் கொண்டுள்ள இந்த தீபாவளி எடிஷனின் முன்பக்க கேமரா மூன்றுக்கும் அதிகமானோர்களை க்ரூப்பீ எடுக்க உதவும் மறுகையில், இதன் பின்புற கேமராவானது, இரட்டை பிடிஏஎப் அம்சம் மற்றும் முழு எச்டி 1080பி வீடியோ பதிவை வழங்குகிறது.

கைரேகை சென்சார்

கைரேகை சென்சார்

முன்பக்கம் எதிர்கொள்ளும் கைரேகை சென்சார் ஏற்றப்பட்டு வரும் இந்த ஸ்மார்ட்போனின் இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில்: 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ் மற்றும் ஹைப்ரிட் டூயல் சிம் (நானோ + நானோ) ஆகியவைகளை கொண்டுள்ளது. அளவீட்டில், 153.3 x 75.2 x 7.3 மிமீ மற்றும் 153 கிராம் எடையுள்ளதாக உள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo F3 Diwali Edition launched in India at Rs 18,990. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X