பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. IP69 ரேட்டிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
அமேசான் விற்பனையில் (Amazon Sale) ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி மெயின் கேமரா, 80W சூப்பர்வூக் சார்ஜிங், 6000mAh பேட்டரி பீச்சர்களை கொண்ட ஓப்போ எப்29 ப்ரோ 5ஜி (OPPO F29 Pro 5G) போனின் விற்பனை டிஸ்கவுண்ட் போக தொடங்கி இருக்கிறது. பட்ஜெட்டில் பிரீமியம் போன்களுக்கு நிகரான பில்ட்-குவாலிட்டி கொடுக்கும் இந்த ஓப்போ எப்29 ப்ரோ 5ஜி போனின் பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.
ஓப்போ எப்29 ப்ரோ 5ஜி அம்சங்கள் (OPPO F29 Pro 5G Specifications): இந்த ஓப்போ போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி (Octa Core 4nm MediaTek Dimensity 7300 Energy) சிப்செட் கிடைக்கிறது. நெட்வொர்க் பூஸ்ட் (Network Boost) மற்றும் கேமிங் ஆண்டெனா (Gaming Antenna) போன்ற பீச்சர்கள் இருக்கின்றன.

ஏஐ பீச்சர்களுடன் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கிடைக்கிறது. ஆகவே, ஏஐ இமேஜ் அசிஸ்டன்ட் (AI Image Assistant) மூலம் ஏஐ கிளாரிட்டி என்ஹான்சர் (AI Clarity Enhancer), ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ அன்பிளர் (AI Unblur) ஆகிய பீச்சர்கள் கேமராவில் கிடைக்கின்றன. அதுவே மல்டிமீடியாவில் இன்ஸ்டன்ட் டிரான்ஸ்லேஷன் (Instant Translation), கிளியர் வாய்ஸ் பில்டர்கள் (Clear Voice Filters) உள்ளன.
இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. குளோவ் மோட் (Glove Mode), அவுட்டோர் மோட் (Outdoor Mode), டிராப் ரெசிஸ்டன்ட் (Drop Resistant) சப்போர்ட் கொண்ட 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. ஃபுஎச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது.
மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு மற்றும் 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. IP66 மற்றும் IP68 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இதுபோக IP69 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.
ஆகவே, இந்த ஓப்போ எப்29 ப்ரோ 5ஜி போனில் 360 டிகிரி ஆர்மர் பாடி எதிர்பார்க்கலாம். 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மூன்று வேரியண்ட்கள் விற்பனைக்கு வந்துள்ளது. கேமராவில் பிரீமியம் சென்சார்கள் கிடையாது. ஆகவே, 50 எம்பி மெயின் + 2 எம்பி செகண்டரி கிடைக்கிறது.
16 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த ஓப்போ கொடுக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப பேக்கப் கொடுக்கும்படியான பேட்டரி சிஸ்டம் உள்ளது. ஆகவே, 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6000mAh பேட்டரி கொடுக்கப்படுகிறது. கிரனைட் பிளாக் (Granite Black) அல்லது மார்பிள் ஒயிட் (Marble White) ஆகிய கலர்களில் இப்போது ஆர்டர் செய்து கொள்ளலாம்.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.27,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.29,999ஆகவும் இருக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.31,999ஆகவும் இருக்கிறது. இப்போது அமேசான் தளத்தில் ஆக்சிஸ் கிரெடிட் கார்டுக்கு ரூ.2,700 டிஸ்கவுண்ட் போக கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








