Home
Mobile

ஏப்.1 குறிச்சாச்சு.. ரூ.25,200 போதும்.. அண்டர் வாட்டர் கேமரா.. 6000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

அண்டர் வாட்டர் போட்டோகிராபி அவுட்புட் கொடுக்கும்படி IP69 ரேட்டிங், IP66 மற்றும் IP68 ரேட்டிங் மட்டுமல்லாமல், ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளே, 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 6000mAh பேட்டரி, 50 எம்பி மெயின் கேமரா போன்ற பீச்சர்களுடன் ஓப்போ எப்29 ப்ரோ 5ஜி (OPPO F29 Pro 5G) வெளியாகி இருக்கிறது. இந்த ஓப்போ போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் ஓப்போ எப்29 5ஜி சீரிஸ் (OPPO F29 5G Series) களமிறங்கி இருக்கிறது. இதில் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு பிரீமியம் பீச்சர்களுடன் ஓப்போ எப்29 ப்ரோ 5ஜி கிடைக்கிறது. IP69 ரேட்டிங், IP66 மற்றும் IP68 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. இதன் மூலம் அண்டர் வாட்டர் போட்டோகிராபி கொண்ட மாடலாக இருக்கிறது.

ஏப்.1 குறிச்சாச்சு.. ரூ.25,200 போதும்.. அண்டர் வாட்டர் கேமரா மாடல்!

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஓப்பன் சேல் தொடங்குகிறது. இருப்பினும், இப்போது ரூ.2,799 பேங்க் டிஸ்கவுண்ட் போக ப்ரீ-ஆர்டர் தொடங்கி இருக்கிறது. அமேசான் (Amazon) மற்றும் ஓப்போ தளங்களில் ப்ரீ-ஆர்டர் செய்து கொள்ளலாம். 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.27,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.29,999ஆகவும் இருக்கிறது.

மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் மாடலின் விலை ரூ.31,999ஆகவும் இருக்கிறது. இப்போது, ப்ரீ-ஆர்டர் செய்தால் ரூ.2,799 டிஸ்கவுண்ட் போக ரூ.25,200 ஆரம்ப விலையில் வாங்கி கொள்ளலாம். ஏப்ரல் 1ஆம் தேதி விற்பனையின்போது, ரூ.2,500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இப்போது, மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்வோம்.

ஓப்போ எப்29 ப்ரோ 5ஜி அம்சங்கள் (OPPO F29 Pro 5G Specifications): இந்த ப்ரோ மாடலில் 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் குளோவ் டச் கன்ட்ரோல் மற்றம் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு கிடைக்கிறது. ஃபுஎச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. ஆகவே, டிஸ்பிளேவில் மிட்-பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம். லேட்டஸ்ட் மாடல்களில் வரும் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) சப்போர்ட் உள்ளது.

Take a Poll

இந்த ஓப்போ எப்29 ப்ரோ 5ஜி போனில் லாக்-ப்ரீ பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி 4என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி (4nm Octa Core MediaTek Dimensity 7300 Energy) சிப்செட் வருகிறது. ஏஐ அன்பிளர், ஏஐ இமேஜ் அசிஸ்டன்ட் மற்றும் ஏஐ ரெஃப்ளெக்சன் ரிமூவர் பீச்சர்களுடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி மோனோகுரோம் கேமரா கிடைக்கிறது.

16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. வெறும் 7.6 எம்எம் தடிமனில் 6000mAh பேட்டரி கொடுக்கிறது. இந்த பேட்டரிக்கு 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி போர்ட் கிடைக்கிறது. இந்த ஓப்போ எப்29 ப்ரோ 5ஜி போனில் கிரனைட் பிளாக் (Granite Black) மற்றும் மார்பிள் ஒயிட் (Marble White) ஆகிய கலர்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO F29 Pro 5G With 12GB RAM Launched Sale From April 1 in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X