Home
Mobile

OPPO 5ஜி போனுக்கு செம தள்ளுபடி.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஓப்போ நிறுவனத்தின் ஓப்போ எப்29 ப்ரோ 5ஜி (OPPO F29 Pro 5G) ஸ்மார்ட்போன் ஆனது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஐபி69 ரேட்டிங், 6000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஓப்போ எப்29 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 39 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரு.1000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.18,999 விலையில் வாங்கிவிட முடியும்.

OPPO 5ஜி போனுக்கு செம தள்ளுபடி.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஓப்போ எப்29 ப்ரோ 5ஜி அம்சங்கள் (OPPO F29 Pro 5G Specifications): 6.67 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் ஓப்போ எப்29 ப்ரோ 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 × 1080 பிக்சல்கள், 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு, 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி (MediaTek Dimensity 7300 Energy) சிப்செட் வசதியுடன் ஓப்போ எப்29 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த போனுககு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

நெட்வொர்க் பூஸ்ட் (Network Boost), கேமிங் ஆண்டெனா (Gaming Antenna) போன்ற பீச்சர்கள் இந்த போனில் கிடைக்கிறது. மேலும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த ஓப்போ எப்29 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

50 எம்பி மெயின் + 2 எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஓப்போ எப்29 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ஒப்போ மாடல்.ஏஐ இமேஜ் அசிஸ்டன்ட் (AI Image Assistant) மூலம் ஏஐ கிளாரிட்டி என்ஹான்சர் (AI Clarity Enhancer), ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ அன்பிளர் (AI Unblur) போன்ற பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6000mAh பேட்டரி வசதியுடன் ஓப்போ எப்29 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போனில் உள்ளது. கிரனைட் பிளாக் (Granite Black) அல்லது மார்பிள் ஒயிட் (Marble White) நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO F29 Pro 5G smartphone with 8GB RAM discounted on Flipkart: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X