Home
Mobile

வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கனும்.. 6000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் விரைவில் ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி (Oppo F29 Pro 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது வரும் வாரங்களில் இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Oppo F29 Pro 5G specifications): 6.67-இன்ச் குவாட் கர்வ்ட் அமோலெட்(quad-curved AMOLED)டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. இதுதவிர பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கனும்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் (Dimensity 7300 chipset) உடன் ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த புதிய ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ColorOS 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6000mAh பேட்டரி வசதியுடன் ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி போனில் உள்ளன. மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த புதிய ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஒப்போ போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo F29 Pro 5G full specifications leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X