SALE பிச்சிக்கும்.. ரூ.21600-க்கு 6500mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
ஓப்போ பிரியர்கள் மட்டுமல்லாமல் ரக்கட் ஸ்மார்ட்போன்களை விரும்பும் பிரியர்களையும் தட்டித் தூக்கும்படி 360 டிகிரி ஆர்மர் பாடி, IP66 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் மட்டுமல்லாமல், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, 45W சூப்பர்வூக் சார்ஜிங் கொண்ட 6500mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் ஓப்போ எப்29 5ஜி (OPPO F29 5G) போன் பட்ஜெட்டில் களமிறங்கி இருக்கிறது. நெட்வொரக் பூஸ்ட், கேமிங் ஆண்டெனா போன்ற பீச்சர்களை கொடுக்கும் இந்த போனின் விவரங்கள் இதோ.
இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாத புரொடெக்சன் பீச்சர்களை பேக் செய்துள்ளது. IP69 ரேட்டிங் மட்டுமல்லாமல், IP66 மற்றும் IP68 ரேட்டிங் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. இதன் மூலம் கோல்டு-ப்ரூப் (Cold-Proof), டைட் வாட்டர்ப்ரூப் (Tight WaterProof), லிக்விட் ப்ரூப் (Liquid Proof), டெம்ப்ரேச்சர் ப்ரூப் (Temperature Proof) போன்றவை கிடைக்கின்றன.

இதுபோக 360 டிகிரி ஆர்மர் பாடி (360° Armour Body) மூலம் டிராப் ரெசிஸ்டன்ஸ் (Drop Resistance), அல்ட்ரா ஷாக் ரெசிஸ்டன்ட் (Ultra Shock Resistant) மற்றும் ஆன்டி-டிராப் கிளாஸ் (Anti-drop Glass) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, பட்ஜெட்டில் ஒட்டுமொத்த பாடி மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. இப்போது டிஸ்பிளே, கேமரா போன்ற பீச்சர்களை தெரிந்து கொள்வோம்.
ஓப்போ எப்29 5ஜி அம்சங்கள் (OPPO F29 5G Specifications): இந்த ஓப்போ போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) மற்றும் கேமிங் பிரியர்களுக்கான அவுட்புட் கொடுக்கும்படி அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த கலர்ஓஎஸ் மூலம் நெட்வொர்க் பூஸ்ட் மற்றும் கேமிங் ஆண்டெனா சப்போர்ட் கிடைக்கிறது.
ஆகவே, 300 சதவீதம் வரையில் நெட்வொர்க் பூஸ்ட் கிடைக்கும். அதேபோல கேமிங் பிரியர்களுக்கு வை-பை கனெக்டிவிட்டியின் அதிவேக அவுட்புட் கொடுக்க கேமிங் ஆண்டெனா சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக ஏஐ இமேஜ் அசிஸ்டன்ட், ஏஐ அன்பிளர், ஏஐ ரெஃப்ளெக்சன் ரிமூவர் மற்றும் ஏஐ எரைசர் போன்ற கேமரா பீச்சர்களையும் கொடுக்கிறது.

4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (4nm Octa Core Snapdragon 6 Gen 1) சிப்செட் மற்றும் 8ஜிபி ரேம் வருகிறது. ஆகவே, 8ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. குளோவ் டச் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ கொண்ட டிஸ்பிளே உள்ளது.
ஆகவே, இந்த புரொடெக்சனுடன் 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த ஓப்போ எப்29 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி மோனோ குரோம் கேமரா கிடைக்கிறது.
6500mAh பேட்டரி மற்றும் 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.23,999-க்கும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.25,999-க்கும் களமிறங்கி இருக்கிறது. ரூ.2,399 பேங்க் டிஸ்கவுண்ட் போக ப்ரீ-ஆர்டர் தொடங்கிவிட்டது. மார்ச் 27ஆம் தேதி அமேசானில் விற்பனை தொடங்குகிறது. அப்போது, ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








