யாரு விடுவா சொல்லுங்க.. 6500mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. 45W சார்ஜிங்.. ஆஃபரில் OPPO 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் ஒப்போ எப்29 5ஜி (OPPO F29 5G) ஸ்மார்ட்போன் ஆனது தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதுவும் இந்த போன் ஐபி69 ரேட்டிங், 6500mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ எப்29 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 34 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,899 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வஙகி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஒப்போ எப்29 5ஜி அம்சங்கள் (OPPO F29 5G specifications): ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 எஸ்ஒசி (Snapdragon 6 Gen 1) சிப்செட் வசதி இந்த ஒப்போ எப்29 5ஜி போனில் உள்ளது. மேலும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக கலர்ஓஸ் 15 (ColorOS 15) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
அதேபோல் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒப்போ எப்29 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கொரில்லா கிளாஸ் 7ஐ உள்ளிட்ட பல்வேறு பல்வேறு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே ஆனது சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
குறிப்பாக 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மோனோக்ரோம் (monochrome) என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஒப்போ எப்29 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
அதுவும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதி இந்த ஒப்போ எப்29 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. IP68+IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த அசத்தலான ஒப்போ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஒப்போ எப்29 5ஜி 6500mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 5 802.11 ஏசி, ஜிபிஎஸ் (GPS), க்ளோனஸ் (GLONASS), கலிலியோ (Galileo), ப்ளூடூத் 5.1 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
மேலும் கிளாசியர் ப்ளூ (Glacier Blue) மற்றும் சாலிட் பர்பிள் (Solid Purple) நிறங்களில் ஒப்போ எப்29 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்ளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








