Home
Mobile

ஆர்டர் போட்ருங்க.. AMOLED டிஸ்பிளே.. 6500mAh பேட்டரி.. விற்பனைக்கு வந்தது புதிய OPPO போன்.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் கடந்த வாரம் அறிமுகம் செய்த ஒப்போ எப்29 5ஜி (OPPO F29 5G) ஸ்மார்ட்போன் ஆனது இன்று பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ எப்29 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.23,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.25,999-ஆக உள்ளது. மேலும் அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் இந்த போனை வாங்க முடியும். பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது.

ஆர்டர் போட்ருங்க.. விற்பனைக்கு வந்தது புதிய OPPO போன்.. எந்த மாடல்?

ஒப்போ எப்29 5ஜி அம்சங்கள் (OPPO F29 5G specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியடன் இந்த ஒப்போ எப்29 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கொரில்லா கிளாஸ் 7ஐ உள்ளிட்ட பல்வேறு பல்வேறு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே ஆனது சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

Take a Poll

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 எஸ்ஒசி (Snapdragon 6 Gen 1) சிப்செட் வசதி இந்த ஒப்போ எப்29 5ஜி போனில் உள்ளது. மேலும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக கலர்ஓஸ் 15 (ColorOS 15) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மோனோக்ரோம் (monochrome) என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஒப்போ எப்29 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதி இந்த ஒப்போ எப்29 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் IP68+IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த அசத்தலான ஒப்போ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

6500mAh பேட்டரி உடன் ஒப்போ எப்29 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 5 802.11 ஏசி, ஜிபிஎஸ் (GPS), க்ளோனஸ் (GLONASS), கலிலியோ (Galileo), ப்ளூடூத் 5.1 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

கிளாசியர் ப்ளூ (Glacier Blue) மற்றும் சாலிட் பர்பிள் (Solid Purple) நிறங்களில் ஒப்போ எப்29 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் ஒப்போ நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO F29 5G goes on sale for the first time in India: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X