ரூ.4,000 ரேட் கட்.. அடிமட்ட பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. 67W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) நேரடியாக ரூ.4,000 விலை குறைப்பு போக பிரீமியம் வீகன் லெதர் பேனல் கொண்ட ஓப்போ எப்27 ப்ரோ பிளஸ் (OPPO F27 Pro+) போன் கிடைக்கிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே மட்டுல்லாமல், 360 டிகிரி ஆர்மர் பாடி, IP69 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது. டெபிட் கார்டுகளோ அல்லது கிரெடிட் கார்டுகளோ இல்லாமலேயே அடிமட்ட விலைக்கு இப்போது ஆர்டர் செய்ய முடியும். இந்த ஓப்போ எப்27 ப்ரோ பிளஸ் போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஓப்போ எப்27 ப்ரோ பிளஸ் பிளிப்கார்ட் விற்பனை (OPPO F27 Pro+ Flipkart Sale): இந்த ஓப்போவின் மார்கெட் விலையை பார்க்கையில், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டானது ரூ.27,999 பட்ஜெட்டிலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டானது ரூ.29,999 பட்ஜெட்டிலும் இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.23,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

ஆகவே, நேரடியாக ரூ.4,000 விலை குறைப்பில் வாங்கி கொள்ளலாம். உங்களிடம் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. பிரீமியம் டூயல் டோன் லெதர் பேனல் டிசைனில் டஸ்க் பிங்க் (Dusk Pink) மற்றும் மிட்நைட் நேவி (Midnight Navy) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இப்போது பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ஓப்போ எப்27 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (OPPO F27 Pro+ Specifications): இந்த ப்ரோ மாடலில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) கொண்ட ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 (Octa Core 6nm MediaTek Dimensity 7050) சிப்செட் கிடைக்கிறது. 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொடுக்கிறது.
டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு கிடைக்கிறது. இதுபோக 360 டிகிரி ஆர்மர் பாடி கொடுக்கிறது. மேலும், IP69 ரேட்டிங், IP68 ரேட்டிங் மற்றும் IP66 ரேட்டிங் போன்ற ஒட்டுமொத்த ஆல்-ரவுண்ட் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிகிறது. டியூரபிலிட்டி பிரீமியமாக இருக்கிறது.
இந்த ஓப்போவில் 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) 3டி கரவ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே மற்றும் ஸ்பிளாஷ் டச் கன்ட்ரோல் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதுபோக 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.
இந்த ஓப்போ எப்27 ப்ரோ பிளஸ் போனில் ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி கொண்ட 64 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா சப்போர்ட் கிடைக்கிறது. ஏஐ எரைசர் (AI Eraser) போன்ற பீச்சர்கள் வருகின்றன. 5000mAh பேட்டரி & 67W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.
அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!


Click it and Unblock the Notifications








