Home
Mobile

OPPO ருத்ர தாண்டவம்.. 67W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. மிலிட்டரி தரம்.. 64MP கேமரா.. என்ன மாடல்?

ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ எப்27 ப்ரோ பிளஸ் 5ஜி (OPPO F27 Pro+ 5G) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், 64எம்பி கேமரா மிலிட்டரி கிரேட் (Military Grade) தரத்தில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இப்போது ஒப்போ எப்27 ப்ரோ பிளஸ் 5ஜி விலை, அம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒப்போ எப்27 ப்ரோ பிளஸ் 5ஜி அம்சங்கள் (OPPO F27 Pro Plus 5G specifications): 6.7 இன்ச் அமோலெட் கர்வ்ட் (AMOLED curved) டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) மற்றும் பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

OPPO ருத்ர தாண்டவம்.. மிலிட்டரி தரம்.. 64MP கேமரா.. என்ன மாடல்?

ஒப்போ எப்27 ப்ரோ பிளஸ் 5ஜி போனில் 64 எம்பி அல்ட்ரா கிளியர் மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும்.

சக்திவாய்ந்த ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் சிப்செட் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒப்போ போன். அதேபோல் கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி ஜி68 எம்சி4 ஜிபியு (Mali G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஒப்போ போன்.

OPPO ருத்ர தாண்டவம்.. மிலிட்டரி தரம்.. 64MP கேமரா.. என்ன மாடல்?

5000mAh பேட்டரி வசதியுடன் ஒப்போ எப்27 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது. அதேபோல் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (67W fast charging) கொண்டுள்ளது இந்த ஒப்போ போன். குறிப்பாக 22 நிமிடங்களில் இந்த போனை 56 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும். பின்பு ஹீட் கன்ட்ரோல் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போன்.

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஒப்போ எப்27 ப்ரோ பிளஸ் 5ஜி போன் விற்பனைக்கு வரும் குறிப்பாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor),கலர் ஓஎஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது.

ஒப்போ எப்27 ப்ரோ பிளஸ் 5ஜி போன் ஆனது IP69, IP68 மற்றும் IP66 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது ஆகவே, கூலிங் வாட்டர் மட்டுமல்லாமல், ஹாட் வாட்டர் ரெசிஸ்டன்ட்டும் கிடைக்கிறது. ஓப்போ கிரிஸ்டல் கிளாஸ் புரொடெக்சன் (Oppo Crystal Glass Protection) வருகிறது.

OPPO ருத்ர தாண்டவம்.. மிலிட்டரி தரம்.. 64MP கேமரா.. என்ன மாடல்?

5ஜி (5G), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11 ஏஎக்ஸ் (Wi-Fi 6 802.11 ax), புளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி போர்ட் ( USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒப்போ எப்27 ப்ரோ பிளஸ் 5ஜி போன். மிட்நைட் நேவி மற்றும் டஸ்க் பிங்க் நிறங்களில் இந்த அட்டகாசமான போனை வாங்கலாம்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ எப்27 ப்ரோ பிளஸ் 5ஜி போனின் விலை ரூ.27,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.29,999-ஆக உள்ளது. இன்று முதல் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு தொடங்குகிறது. வரும் ஜூன் 20-ம் தேதி இந்த போன் விற்பனைக்கு வருகிறது.

Best Mobiles in India

English summary
oppo f27 pro plus 5g with 64mp camera 12gb ram launched sale form june 20 specifications price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X