பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. 64எம்பி கேமரா.. ஐபி69 ரேட்டிங்.. ஆஃபரில் Oppo 5ஜி பேன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் தரமான ஒப்போ எப்27 ப்ரோ பிளஸ் 5ஜி (OPPO F27 Pro plus 5G) ஸ்மார்ட்போன் ஆனது தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் டைமன்சிட்டி சிப்செட், 64எம்பி கேமரா, ஐபி69 ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது ஒப்போ எப்27 ப்ரோ பிளஸ் 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் ஒப்போ எப்27 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 36 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் கிடைக்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஒப்போ எப்27 ப்ரோ பிளஸ் 5ஜி அம்சங்கள் (OPPO F27 Pro Plus 5G specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் சிப்செட் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒப்போ போன். அதேபோல் கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி ஜி68 எம்சி4 ஜிபியு (Mali G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஒப்போ போன்.
6.7 இன்ச் அமோலெட் கர்வ்ட் (AMOLED curved) டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) மற்றும் பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
64 எம்பி அல்ட்ரா கிளியர் மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் ஒப்போ எப்27 ப்ரோ பிளஸ் 5ஜி போனில் உள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும்.
ஒப்போ எப்27 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (67W fast charging) கொண்டுள்ளது இந்த ஒப்போ போன். குறிப்பாக 22 நிமிடங்களில் இந்த போனை 56 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும். பின்பு ஹீட் கன்ட்ரோல் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போன்.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ஒப்போ எப்27 ப்ரோ பிளஸ் 5ஜி போன். குறிப்பாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), கலர் ஓஎஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது.

IP69, IP68 மற்றும் IP66 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது ஒப்போ எப்27 ப்ரோ பிளஸ் 5ஜி போன். ஆகவே, கூலிங் வாட்டர் மட்டுமல்லாமல், ஹாட் வாட்டர் ரெசிஸ்டன்ட்டும் கிடைக்கிறது. ஓப்போ கிரிஸ்டல் கிளாஸ் புரொடெக்சன் (Oppo Crystal Glass Protection) உடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
அதேபோல் 5ஜி (5G), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11 ஏஎக்ஸ் (Wi-Fi 6 802.11 ax), புளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி போர்ட் ( USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒப்போ எப்27 ப்ரோ பிளஸ் 5ஜி போன். மிட்நைட் நேவி மற்றும் டஸ்க் பிங்க் நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








