Home
Mobile

ஜூன் 13 உறுதி.. 67W சார்ஜிங்.. 512GB மெமரி.. 64MP கேமரா.. இந்தியாவுக்கு வரும் OPPO 5G போன்.. எந்த மாடல்?

கடந்த ஏப்ரல் மாதம் சீனாவில் ஒப்போ ஏ3 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஒப்போ ஏ3 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் ஒப்போ எப்27 ப்ரோ பிளஸ் 5ஜி (OPPO F27 Pro+ 5G) எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக 64எம்பி கேமரா, 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஒப்போ போன் வெளிவரும். மேலும் இப்போது ஒப்போ எப்27 ப்ரோ பிளஸ் 5ஜி போனின் அறிமுக தேதி மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

அதாவது வரும் ஜூன் 13 ஆம் தேதி ஒப்போ எப்27 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதுவும் IP69, IP68 மற்றும் IP66 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது ஒப்போ எப்27 ப்ரோ 5ஜி போன். அதாவது கூலிங் வாட்டர் மட்டுமல்லாமல், ஹாட் வாட்டர் ரெசிஸ்டன்ட்டும் கிடைக்கிறது. இதுதவிர இந்த போனுக்கு கிரிஸ்டல் கிளாஸ் புரொடெக்சன் (Oppo Crystal Glass Protection) கிடைக்கிறது.

ஜூன் 13 உறுதி..  இந்தியாவுக்கு வரும் OPPO 5G போன்.. எந்த மாடல்?

ஒப்போ எப்27 ப்ரோ 5ஜி அம்சங்கள் (OPPO F27 Pro Plus 5G specifications): 6.7 இன்ச் அமோலெட் (AMOLED)டிஸ்பிளே உடன் இந்தியாவில் ஒப்போ எப்27 ப்ரோ 5ஜி போன் அறிமுகமாகும். இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) மற்றும் பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் சிப்செட் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ போன். அதேபோல் கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி ஜி68 எம்சி4 ஜிபியு (Mali G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன்.

ஜூன் 13 உறுதி..  இந்தியாவுக்கு வரும் OPPO 5G போன்.. எந்த மாடல்?

ஒப்போ எப்27 ப்ரோ 5ஜி போனில் 64 எம்பி அல்ட்ரா கிளியர் மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும்.

5000mAh பேட்டரி வசதியுடன் இந்தியாவில் ஒப்போ எப்27 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது. அதேபோல் 67 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது இந்த ஒப்போ போன். குறிப்பாக 22 நிமிடங்களில் இந்த போனை 56 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும். பின்பு ஹீட் கன்ட்ரோல் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போன்.

ஜூன் 13 உறுதி..  இந்தியாவுக்கு வரும் OPPO 5G போன்.. எந்த மாடல்?

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி என மூன்று வேரியண்ட்களில் இந்த புதிய ஒப்போ ஏ3 ப்ரோ போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), போன்ற அம்சங்களும் இதில் உள்ளன.

குறிப்பாக 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த ஒப்போ போன். பின்பு அசூர் (கிளாஸ்), மவுன்டெய்ன் (லெதர்) மற்றும் யுன்ஜின் பிங்க் (லெதர்)நிறங்களில் ஒப்போ எப்27 ப்ரோ 5ஜி விற்பனைக்கு வரும். அதேபோல் இந்தியாவில் ரூ.25,000 பட்ஜெட்டில் இந்த போன் வெளிவரும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO F27 Pro Plus 5G India Launch Date Revealed: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X