OPPO F27 Pro+ 5G ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன்ஸ்: இந்தியாவின் முதல் சூப்பர் ரக்டு மான்சூன்-ரெடி ஃபோன் இதோ தயார்!

ஒப்போ எஃப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய மிட்ரேஞ் ஸ்மார்ட்போன் செக்மென்ட் பிரிவில் முன்னிலை வகிக்கின்றன. ஒப்போ நிறுவனத்தால், இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட முந்தைய இரண்டு எஃப் சீரிஸ் மாடல்கள் அதன் புதுமையான அம்சங்களால் வாடிக்கையாளர்களை திகைக்க வைத்தன. OPPO F27 Pro +5G ஆனது அதன் சிறப்பான வடிவமைப்பு மற்றும் கேமரா அம்சத்துடன் பல ஃபிளாக்ஷிப்களுக்கான அளவுகோலை தாண்டி சென்றது. இதற்கு முன்னோடியான, ஒப்போ எஃப்23 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது நீடித்த பேட்டரி ஆயுள் மற்றும் பார்ப்பவர்களை கவரும் வடிவமைப்புடன் வாடிக்கையாளர்களை ஈர்த்தது.
இப்போது, OPPO F27 Pro +5G ஆனது, ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்களாகிய நாம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவாலான பருவமழைக் காலத்தை எதிர்கொள்ளும் வகையில் நம்முடைய சொந்த மண்ணிற்கு வந்து சேர்ந்துள்ளது. இடைவிடாத மழையின் பருவ காலத்தில், ஸ்மார்ட்போன் ரிப்பேர் சதவீதம் 35% ஆக அதிகரிக்கிறது. அதேபோல், மற்றொரு 30% ஸ்மார்ட்போன்கள் வானத்திலிருந்து வரும் மழை மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளால் சேதமடைந்துள்ளன என்று கணக்கெடுப்பு தகவல் கூறுகிறது.
அதை மனதில் வைத்துக்கொண்டு, ஒப்போ நிறுவனம் மீண்டும் அதன் டிராயிங் போர்டுக்குச் சென்று திட்டங்களை தீட்டி, இந்த முறை மிகவும் ஸ்டைலான OPPO F27 Pro +5G ஸ்மார்ட்போனுடன் வெளிவந்து நம்மை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் "முதல் சூப்பர் ரக்டு மான்சூன் ரெடி ஃபோன்" என்ற ஸ்லோகன் உடன் ஆரவாரமாக புது போனை அறிமுகம் செய்துள்ளது. OPPO F27 Pro +5Gஆனது ஐபி69 மதிப்பீடு, 360 டிகிரி ஆர்மர் பாடி மற்றும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் முதல் ஸ்மார்ட்ஃபோனை உருவாக்கும் பல அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
OPPO F27 Pro +5G ஸ்மார்ட்போனின் விலை பற்றி பேசுகையில், இது 8GB + 128GB மாடலுக்கு ரூ. 27,999 என்ற விலையிலும், இதன் 8GB + 256GB மாடல் ரூ. 29,999 என்ற விலையிலும் வருகிறது. Oppo F27 Pro +5G இந்தியாவின் மோசமான மான்சூன் காலத்தையும், அதனால் ஏற்படும் சவால்களையும் எளிதாய் கடக்க உதவும் வகையில், உங்கள் பணத்திற்கு சிறந்த தேர்வாக அமைகிறது. OPPO F27 Pro +5G அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக நாங்கள் சிறிது நேரம் அதனுடன் செலவிட்டோம். OPPO F27 Pro +5Gயின் ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன் இதோ:

இந்திய பருவமழையை சமாளிக்க 360° ஆர்மர்!
OPPO F27 Pro +5G ஆனது, இந்தியப் பருவமழையின் நீரை சவாலுடன் சந்திக்க தயாராக இருக்கும் வகையில் அடித்தளத்திலிருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. OPPO F27 Pro +5G ஆனது ஐபி66, ஐபி68 மற்றும் ஐபி69 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மதிப்பீடுகளைப் பெற்றுள்ளது. இந்த மதிப்பீட்டை பெரும் முதல் ஸ்மார்ட்ஃபோன் இதுவாகும்.
இந்த மதிப்பீடு எண்கள் சிலருக்கு கிரேக்க மொழி போல் புரியாமல் போகலாம், ஆகவே, இந்த மதிப்பீடு எண்கள் எதைக் குறிக்கின்றன என்பதை விளக்கமாக பார்க்கலாம். இந்த மதிப்பீடுகளின் அர்த்தம் என்னவென்றால், OPPO F27 Pro +5G தூசி, உயர் அழுத்தம் மற்றும் உயர் வெப்பநிலை நீர் தெளிப்புகளை சமாளிக்கும் திறனுடன் வருவதை குறிக்கிறது. அதேபோல், 30 நிமிடங்கள் வரை சுத்தமான நீரில் மூழ்கியிருக்கும் திறனின் மதிப்பீட்டை குறிக்கிறது.
நீர் மற்றும் தூசிக்கு எதிரான ரெசிஸ்டன்ஸ் ஆதரவு ஹீட் ரெசிஸ்டன்ஸ் க்ளூ, வாட்டர்ப்ரூப் சர்கியூட், சிலிகான் சீல் செய்யப்பட்ட சார்ஜிங் போர்ட், சிம் கார்டு ஸ்லாட் மற்றும் மைக்ரோஃபோன் மற்றும் ஸ்பீக்கர்கள் மூலம் மிகவும் உறுதியான நீர் மற்றும் தூசி எதிர்ப்பை இந்த OPPO F27 Pro +5G ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது.
பொதுவாக, நீங்கள் திடீரென ஒரு பலத்த மழையில் சிக்கிக்கொண்டாலோ, அல்லது உங்கள் நண்பர்களால் ஒரு ஸ்விமிங்பூலில் நீங்கள் தள்ளப்பட்டாலோ, அல்லது எந்தவித சூழ்நிலையிலாவது நீங்கள் முழுமையாக நனைந்தாலோ எந்தவித ஐயமுமின்றி OPPO F27 Pro +5G போனுடன் தலைநிமிர்ந்து நிற்கலாம்.
OPPO F27 Pro +5G போன் ஆனது மழையை சமாளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போனின் மீது தண்ணீர்
பட்டாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போன் 360 டிகிரி ஆர்மர் பாடி கொண்டுள்ளது. இது
வெளிப்புற மற்றும் உள் தாக்கங்களை எளிமையாக சமாளிக்கும். குறிப்பாக தனித்துவமான வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த போனின் முன்பக்கத்தில் டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு வசதி உள்ளது. இது சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொடுக்கும். மற்ற கொரில்லா கிளாஸ் விட இது 180 சதவீதம் கூடுதல் எதிர்ப்புத் திறன் கொண்டது. OPPO F27 Pro +5G போன் ஆனது அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்கிறது.

தரமான பேக் கவர் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இது மழை துளியில் இந்த போன் நனைந்தாலும் சிதைவு ஏற்படாது. குறிப்பாக கைகளுக்குச் சிறந்த கிரிப் வழங்குகிறது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த போனின் வடிவமைப்ப மற்றும் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.
இந்த போனின் மதர்போர்டின் அட்டைக்கு அதிக வலிமை உள்ளது. இது அதிக வெப்ப கடத்துத்திறன் கொண்ட ஏஎம்03 அலுமினிய அலாய் பயன்படுத்துவதன் மூலம் இன்டர்னல்களை பாதுகாப்பாக வைத்திருக்கும். அதேபோல் இந்த போன் கீழே விழுந்தால் உட்புறங்களை அப்படியே வைத்திருக்க ஃபோனின் உட்புறங்களில் ஸ்பான்சஸ் மற்றும் பிற குஷனிங் பொருட்கள் உள்ளன.
OPPO F27 Pro +5G ஸ்மார்ட்போன் ஆனது 150-க்கு அதிகமான மிகவும் கடினமான சோதனைகளுக்குப் பிறகு அறிமுகம் செய்யப்பட்டது. மற்ற ஸ்மார்ட்போன்களை விட தனித்துவமான பாதுகாப்பு வசதி இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர OPPO F27 Pro +5G போன் ஆனது 20,000 பிளக்/அன்பிளக் சோதனைகள் மற்றும் 42,000 மைக்ரோ டிராப் சோதனைகள் மற்றும் பிற கடுமையான சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஸ்விஸ் எஸ்ஜிஎஸ்-இன் சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் 5 ஸ்டார் டிராப் ரெசிஸ்டன்டஸ் கூட பெற்றுள்ளது இந்த போன்.
அதேபோல் இந்த போன் மிலிட்டரி கிரேடு சான்றிதழ் கொண்டுள்ளது. இந்த போன். அதாவது OPPO F27 Pro +5G போனுக்கு எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் மெத்தெடு 516.8 சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக இது ஹார்டு டிரைவ்கள் மற்றும் ராணுவப் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட மடிக்கணினிகளில் காணப்படுகிறது. இதில் ஐந்து சோதனைகள் அடங்கும். அதாவது பங்ஷனல் ஷாக், டிரான்ஸ்போர்ட்டேஷன் ஷாக், ஃபிராக்லிட்டி, டிரான்ஷிட் டிராப், கிராஷ் ஹாஸ்ர்டு ஷாக் ஆகியவை ஆகும்.
பிரீமியம் லுக்கை வழங்கும் வேகன் லெதர் டிசைன்!
குறிப்பாக அனைத்து இந்திய பயனர்களுக்குத் தகுந்தபடி இந்த புதிய OPPO F27 Pro +5G போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே சாதனத்தை நம்பி வாங்கலாம். OPPO F27 Pro +5G போனின் வேகன் லெதர் டிசைன் பிரீமியம் ஆனது தனித்துவமானது ஆகும். டபுள் கர்வ்டு பாடி உடன் வெளிவந்துள்ளது. எனவே கையில் பிடிப்பதற்கு நம்பமுடியாத அளவிற்கு வசதியாக இருக்கும். இந்த போனின் எடை வெறும் 177 கிராம் ஆகும்.
அதேபோல் இந்த OPPO F27 Pro +5G போனின் வேகன் லெதர் டிசைன் மாடல் ஆனது மேம்படுத்தச் சிறப்பு சிலோக்சேன் பூச்சுடன் வருகிறது. மேலும் இது இரண்டு அற்புதமான வண்ண விருப்பங்களுடன் வருகிறது. அதாவது டஸ்க் பிங்க், இது சூரிய அஸ்தமனத்தின் போது சூரியக் கதிர்களை உங்களுக்கு நினைவூட்டுகிறது. அதேபோல் இதன் மிட்நைட் நேவி கொண்ட மாடல் ஆனது நிலா வெளிச்சத்தால் ஒளிரும் அமைதியான இரவு வானத்தை நினைவூட்டுகிறது.
OPPO F27 Pro +5G ஸ்மார்ட்போன் ஆனது ஃபிளாக்ஷிப் காஸ்மோஸ் ரிங் வடிவமைப்பைக் கொண்ட நிறுவனத்தின் முதல் எஃப் சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகும். டூயல் ரியர் கேமரா அமைப்பை வழங்கும் உயர்த்தப்பட்ட வளையம் விண்டேஜ் உயர்நிலை மெக்கானிக்கல் கடிகாரத்தின் டயல் போல் தெரிகிறது மற்றும் வேகன் லெதர் பேக் பிளேட்டுடன் வருவதால் பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது இந்த போன்.

மகிழ்ச்சியூட்டும் டிஸ்பிளே!
OPPO F27 Pro +5G ஸ்மார்ட்போனின் முன்பக்கம் 6.7 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது, இது 93 சதவீத ஸ்க்ரீன் மற்றும் பாடி ரேஷியோவை கொண்டுள்ளது. எப்எச்டி பிளஸ், 3டி கர்வ்டு என இதன் டிஸ்பிளே அனைத்து லைட்டிங் நிலைகளிலும் பார்ப்பதற்கு ஒரு முழுமையான மகிழ்ச்சியை அளிக்கிறது மற்றும் கார்னிங்கின் அல்ட்ரா-டஃப் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 மூலம் பாதுகாக்கவும் படுகிறது.
வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை மேலும் மேம்படுத்துவது, 300 சதவீத வால்யூம் மோட் ஆகும், இது உங்களுக்கு பிடித்த வீடியோக்களைப் பார்க்கும் போது உண்மையிலேயே அதிவேகமான வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்க, அதிகபட்ச அளவை மூன்று மடங்காக உயர்த்தும்.
மேலும் இதன் டிஸ்பிளே ஒப்போவின் ஸ்பிளாஸ் டச் அல்காரிதத்தை பெறுகிறது, இது உங்கள் கைகள் ஈரமாக இருக்கும்போது கூட தொடுவதை அடையாளம் காண அனுமதிக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், பலத்த மழை பெய்தாலும் கூட, OPPO F27 Pro +5G மூலம் மெசேஜ்களை அனுப்பலாம்.

ஏஐ-எனேபிள்டு மேம்பாடுகள் கொண்ட டூயல் கேமரா!
ஒப்போவின் எஃப் சீரிஸ் எப்போதும் புகைப்படம் எடுப்பதற்கு பெயர் பெற்றது மற்றும் பட்ஜெட் விலையில் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்கும் ஜீனியஸ்களுக்கான ஒரு ஸ்மார்ட்போனாக இருந்து வருகிறது. OPPO F27 Pro +5G ஆனது மூன்று கேமராக்களுடன் வருகிறது - 64எம்பி மெயின் ஷூட்டர், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8எம்பி செல்பீ கேமரா. இதன் கேமரா செட்டப் ஆனது ஏஐ ஏரேசர், ஏஐ போட்டோ ரீடூச்சிங், நைட் போர்ட்ரெய்ட், ஃப்ளாஷ் ஸ்னாப்ஷாட் மற்றும் ஏஐ இமேஜ் மேட்டிங் உள்ளிட்ட பல ஏஐ அம்சங்களையும் கொண்டுள்ளது.
எனவே நீங்கள் எந்த லைட்டிங் சூழ்நிலை அல்லது எந்த இடத்தில் புகைப்படம் எடுத்தாலும் கூட, OPPO F27 Pro +5G ஆனது, உங்கள் புகைப்படங்கள் நீங்கள் விரும்பும் விதத்தில் வெளிவருவதை உறுதிசெய்யும் அளவுக்கு அதிகமான தந்திரங்களை கொண்டுள்ளது.

சூப்பர்வூக்டிஎம் சார்ஜிங் & பிஎச்இ: அதிவேக மற்றும் நீண்ட நேரம் பேட்டரியை வழங்கும்!
தற்போதைய ஜெனரேஷன் ஸ்மார்ட்போன்களுக்கு பாஸ்ட் சார்ஜிங் என்பது மிகவும் அவசியமான அம்சமாகும். ஆகேவ தன OPPO F27 Pro +5G 67W சூப்பர்வூக்டிஎம் ஃபாஸ்ட் சார்ஜருடன் வருகிறது. இது 44 நிமிடங்களில் 5000mAh பேட்டரி பேக்கை 0 முதல் 100% வரை சார்ஜ் செய்யும். விரைவான 20 நிமிட சார்ஜிங்கின் மூலம் பேட்டரியை 56% ஆக உயர்த்த முடியும். இப்படியாக OPPO F27 Pro +5G ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி அதிக நேரத்தை செலவிடலாம் மற்றும் அடிக்கடி சார்ஜ் செய்யும் கவலையும் இருக்காது.
இருப்பினும், பாஸ்ட் சார்ஜ் செய்வது உங்கள் மொபைலின் பேட்டரியில் பாதிப்பை ஏற்படுத்தும், மற்ற பிராண்டுகள் இங்குதான் சொதப்புகின்றன. ஆனால் OPPO F27 Pro +5G ஸ்மார்ட்போன் ஆனது சற்று வித்தியாசமானது, நீங்கள் இதை பயன்படுத்தத் தொடங்கிய முதல் 50 மாதங்களுக்கு பிறகும் கூட ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்ய, இது நிறுவனத்தின் சுய-வளர்ச்சியடைந்த பேட்டரி ஹெல்த் இன்ஜினை கொண்டுள்ளது.

சூப்பர் ஸ்மூத் லாங் டேர்ம் ஆபரேட்டர்!
OPPO F27 Pro +5G ஆனது, ஒப்போவின் 50 மாத பிள்யூயன்சி பாதுகாப்போடு நீண்ட ஆயுளையும் சீரான செயல்திறனையும் உறுதியளிக்கிறது. ஒப்போ வழங்கும் இந்த 4 வருட உறுதியான ஸ்க்ரோலிங் மற்றும் கேமிங்கை உறுதி செய்வது மீடியாடெக்-ன் 6 என்எம்டைமன்சிட்டி 7050 சிப்செட் ஆகும்.
புதிய OPPO F27 Pro +5G ஸ்மார்ட்போன் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் வெளியாகியுள்ளது - 8GB/ 128GB மற்றும் 8GB/256GB. நீங்கள் விர்ச்சுவல் ரேம் செயல்பாட்டை இயக்கினால், ரேம்-ஐ மேலும் 8GB வரை விரிவுபடுத்தலாம், அதே சமயம் ஹை-ஸ்பெக்ட்டு ஸ்டோரேஜ் விருப்பங்கள் ஆனது உங்கள் நேசத்துக்குரிய நினைவுகளையும், பிடித்த கேம்களையும் எப்போதும் உங்களுடன் வைத்திருக்க போதுமான ஸ்டோரேஜை உங்களுக்கு வழங்கும்.
கலர்ஓஎஸ் 14 - கஸ்டமைசேஷன்கள் & அம்சங்கள் ஏராளம்!
OPPO F27 Pro +5G ஸ்மார்ட்போனில் எல்லாவற்றையும் சீராக இயங்க வைப்பது ஒப்போவின் கலர்ஓஎஸ்14 தான். இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலானது. கலர்ஓஎஸ் ஆனது OPPO F27 Pro +5G -ஐ உங்கள் இதயத்திற்கு ஏற்றவாறு கஸ்டமைஸ் செய்ய அனுமதிக்கும் சில மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. கேமிங் சேஷன்கள் அல்லது சோஷியல் மீடியா ஸ்க்ரோலிங்கிலும் ஸ்மூத் ஆன எக்ஸ்பீரியன்ஸை பெறுவீர்கள்.

ஒப்போ எஃப்27 ப்ரோ பிளஸ் 5ஜி பற்றிய இறுதி எண்ணங்கள்!
OPPO F27 Pro +5G ஸ்மார்ட்போன் ஆனது இந்திய பருவமழையின் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஐபி69, ஐபி68, ஐபி66 மதிப்பீடுகள் மற்றும் 360-டிகிரி ஆர்மர் பாடி ஆகியவைகள் மூலம் நீர், தூசி மற்றும் ட்ராப் டேமேஜ் ஆகியவைகளில் இருந்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
மேலும் OPPO F27 Pro +5G ஆனது அதன் கூடுதல் கடினமான உருவாக்கம், அல்ட்ரா-அமர்சிவ் 3டி கர்வ்டு 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, மென்மையான செயல்திறன் மற்றும் விரைவான சார்ஜிங் ஆகியவற்றுடன், நிறுவனத்தின் எப் சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் ஒரு தகுதியான நுழைவாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 8GB + 128GB மற்றும் 8GB + 256GB ஆப்ஷன்கள் முறையே ரூ.27,999 மற்றும் ரூ.29,999 க்கும் வாங்க கிடைக்கும். இது பிளிப்கார்ட், அமேசான், மெயின்லைன் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் ஒப்போ ஸ்டோர் ஆகியவைகள் வழியாக வாங்க கிடைக்கும். இது ஜூன் 20 முதல் விற்பனைக்கு வரும், கூடவே சில அற்புதமான சலுகைகளும் அணுக கிடைக்கும்:
* 6 மாதங்கள் வரை, ரூ.1199 மதிப்புள்ள விபத்து மற்றும் லிக்விட் சேதங்களுக்கு எதிராக கவலையற்ற பாதுகாப்பை பெறவும்.
* முன்னணி கூட்டாளர்களுடன் முன்பணம் செலுத்தாமல் 6 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ மற்றும் 9 மாதங்கள் வரை நுகர்வோர் கடன்களை பெறலாம்.
* OPPO F27 Pro+ 5G-க்கு அப்கிரேட் ஆகி, ரூ.1000 எக்ஸ்சேஞ்ச் போனஸை பெறலாம். தற்போதுள்ள ஒப்போ வாடிக்கையாளர்களும் ரூ.1000 மதிப்புள்ள கூடுதல் லாயல்டி போனஸும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications