Home
Mobile

அடுத்த வாரம் உறுதி.. 256ஜிபி மெமரி.. இந்தியாவுக்கு வரும் புது Oppo 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ எப்27 5ஜி (OPPO F27 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த புதிய ஒப்போ போனின் புகைப்படம் மற்றும் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

ஒப்போ எப்27 5ஜி அம்சங்கள் (OPPO F27 5G Specifications): எல்இடி பிளாஷ் ஆதரவுடன் கூடிய ட்ரிபிள் ரியர் கேமராக்களை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ போன். அதுவும் வட்ட வடிவில் கேமரா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display)உடன் ஒப்போ எப்27 5ஜி போன் வெளியாகும்.

அடுத்த வாரம் உறுதி.. இந்தியாவுக்கு வரும் புது Oppo 5ஜி போன்..

அதேபோல் ஐபி69 ரேட்டிங் (IP69 Rating) உடன் ஒப்போ எப்27 5ஜி போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில இந்த ஒப்போ போன் விற்பனைக்கு வரும். குறிப்பாக நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. குறிப்பாக இந்த போன் ரூ.27,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், 50எம்பி கேமரா, பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஒப்போ போன் வெளிவரும். தற்போது ஒப்போ எப்27 5ஜி போனின் சில அம்சங்கள் மட்டுமே ஆன்லைனில் வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ஏ3எக்ஸ் Oppo A3X) போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ ஏ3எக்ஸ் அம்சங்கள் (Oppo A3X Specifications): 6.67-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் ஒப்போ ஏ3எக்ஸ் வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஸ்மார்ட்போன். இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஒப்போ ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. அதேபோல் 4ஜிபி விர்ச்சுவல் ரேம் இதில் உள்ளது.

அடுத்த வாரம் உறுதி.. இந்தியாவுக்கு வரும் புது Oppo 5ஜி போன்..

இராணுவ தர MIL-STD 810Hசோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளது ஒப்போ ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஸ்டாரி பர்பிள் (Starry Purple), ஸ்பார்க்கிள் பிளாக் (Sparkle Black), ஸ்டார்லைட் ஒயிட் (Starlight White)நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

5100mAh பேட்டரி வசதியுடன் ஒப்போ ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது குறிப்பாக ஒப்போ ஏ3எக்ஸ் போனின் 64ஜிபி வேரியண்ட் ரூ.12,499 விலையிலும், 128ஜிபி வேரியண்ட் ரூ.13,499 விலையிலும் வாங்க கிடைக்கும்.

photo courtesy: 91mobiles

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO F27 5G to launch in India next week: Images and specifications leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X