பட்ஜெட் விலை.. 50எம்பி கேமரா.. இந்தியாவில் அறிமுகமான புதிய Oppo 5ஜி போன்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ எப்27 5ஜி (OPPO F27 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தனித்துவமான டிசைன் மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த ஒப்போ போன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. இப்போது ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ எப்27 5ஜி போனை ரூ.22,999 விலையில் வாங்க முடியும். பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.24,999-ஆக உள்ளது. குறிப்பாக நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், ஆஃப்லைன் கடைகள் மற்றும் பிளிப்கார்ட் தளத்திலிருந்து இந்த புதிய போனை வாங்கலாம்.

மிட் ரேஞ்ச் போனை எமரால்டு கிரீன் (Emerald Green) மற்றும் ஆம்பர் ஆரஞ்சு (Amber Orange) என இரண்டு நிறங்களில் இந்த புதிய ஒப்போ எப்27 5ஜி போனை வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2500 தள்ளுபடியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்போ எப்27 5ஜி அம்சங்கள் (OPPO F27 5G Specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் இந்த ஒப்போ எப்27 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்இ 2100 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 SoC) உடன் இந்த புதிய ஒப்போ எப்27 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ எப்27 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவையும் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.
ஏஐ ஸ்டுடியோ (AI Studio), ஏஐ ஏரேசர் 2.0 (AI Eraser 2.0), ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் 2.0 (AI Smart Image Matting 2.0) உள்ளிட்ட பல அசத்தலான ஏஐ அம்சங்களுடன் ஒப்போ எப்27 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த போன்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஒப்போ எப்27 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது
5000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒப்போ எப்27 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC fast charging)ஆதரவும் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








