அடுத்த ஒப்போ 5ஜி போன் ரெடி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
ஒப்போ நிறுவனம் அடுத்து ஒப்போ எப்27 5ஜி (OPPO F27 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் வாரங்களில் இந்த புதிய போன் இந்தியாவில் அறிமுகமாகும். இந்நிலையில் ஒப்போ எப்27 5ஜி போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே அதன் விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ எப்27 5ஜி போனின் விலை ரூ.22,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.24,999 விலையில் அறிமுகமாகும். அதேபோல் ஆம்பர் ஆரஞ்சு மற்றும் எமரால்டு க்ரீன் நிறங்களில் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ எப்27 5ஜி அம்சங்கள் (OPPO F27 5G Specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே உடன் இந்த ஒப்போ எப்27 5ஜி போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2100 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் உடன் இந்த புதிய ஒப்போ எப்27 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் அறிமுகமாகும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ எப்27 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி சோனி ஐஎம்எஸ்615 (Sony IMX615) கேமராவையும் கொண்டுள்ளது இந்த போன்.
அதேபோல் ஏஐ ஸ்டுடியோ (AI Studio), ஏஐ ஏரேசர் 2.0 (AI Eraser 2.0), ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் 2.0 (AI Smart Image Matting 2.0) உள்ளிட்ட பல அசத்தலான ஏஐ அம்சங்களுன் இந்த போன் வெளிவரும். மேலும்IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த போன் அறிமுகமாகும்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஒப்போ எப்27 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
5000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒப்போ எப்27 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC fast charging)ஆதரவும் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








