Home
Mobile

பட்ஜெட்ல ஓங்கி அடிக்கப்போகும் Oppo.. புதுசா ஒரு Mobile.. மாஸா அம்சங்கள்.. எந்த மாடல்? என்ன விலை?

Oppo இந்தியாவில் புதிய F சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. Oppo F27 5G ஸ்மார்ட்போனுக்கான சரியான வெளியீட்டு தேதி வெளியிடப்படாத நிலையில், அதன் விலை மற்றும் விவரக்குறிப்புகள் குறித்து லீக் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த புதிய ஒப்போ எஃப்27 5ஜி (Oppo F27 5G) மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட், IP64 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மதிப்பீடு, 50 எம்பி பிரைமரி ரியர் கேமரா மற்றும் 5,000எம்ஏஎச் பேட்டரி ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியான லீக் தகவல்களின் படி, ஒப்போ எஃப்27 5ஜி (Oppo F27 5G) ஸ்மார்ட்போனின் விலை ரூ. 22,999 இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது ஒப்போ எஃப்27 5ஜி (Oppo F27 5G) ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாடலுக்கு உரியது என்பது குறிப்பிடத்தக்கது. அதே2போல், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் கூடிய ஹை-எண்டு மாடல் ரூ. 24,999 விலை இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பட்ஜெட்ல ஓங்கி அடிக்கப்போகும் Oppo.. புதுசா ஒரு Mobile.. மாஸா அம்சம்

ஒப்போ எஃப்27 5ஜி (Oppo F27 5G):

இந்த ஒப்போ எஃப்27 5ஜி (Oppo F27 5G) போன் ஆம்பர் ஆரஞ்சு மற்றும் எமரால்டு கிரீன் வண்ணங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போ எஃப்27 5ஜி (Oppo F27 5G) ஸ்மார்ட்போனுக்கான எதிர்பார்க்கப்படும் விற்பனை தேதி ஆகஸ்ட் 20 ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை ஒப்போ நிறுவனம் பல்வேறு வங்கி அட்டை பயனர்கர்ளுக்கு உடனடி கேஷ் பேக் சலுகையாக ரூ. 1,800 வரை வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒப்போ எஃப்27 5ஜி (Oppo F27 5G) போன் ஆறு மாதங்களுக்கு கட்டணமில்லா EMI விருப்பம் மற்றும் ஒரு முறை இலவச டிஸ்பிளே எக்ஸ்சேன்ஜ் போன்ற நன்மைகளுடன் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போ எஃப்27 5ஜி (Oppo F27 5G) ஆனது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ColorOS 14 இல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 6.67" இன்ச் முழு-HD+ OLED டிஸ்ப்ளே உடன் 120Hz மற்றும் 2,100 nits வரை பீக் பிரைட்னஸை கொண்டிருக்கும்.

இந்த ஒப்போ எஃப்27 5ஜி (Oppo F27 5G) சாதனம் MediaTek Dimensity 6300 சிப்செட் உடன், 8GB வரை LPDDR4X ரேம் மற்றும் 256GB வரை UFS 2.2 ஸ்டோரேஜ்ஜை கொண்டிருக்கும். ஒப்போ எஃப்27 5ஜி (Oppo F27 5G) போன் 50 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் லென்ஸுடன் டூயல் கேமரா அமைப்பைக் கொண்டிருப்பதாக வதந்தி பரவுகிறது. இது 32 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டிருக்கலாம்.

ஒப்போ எஃப்27 5ஜி AI அம்சம் (Oppo F27 5G AI Feature):

AI ஸ்டுடியோ, AI 2.0 மற்றும் AI ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் 2.0 போன்ற AI அம்சங்களும் இதில் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த ஒப்போ எஃப்27 5ஜி (Oppo F27 5G) சாதனம் 45W SuperVOOC வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் வலுவான 5,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP64 மதிப்பீட்டுடன் வரலாம் மற்றும் மேம்பட்ட ஆடியோ தரத்திற்கான இரட்டை ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo F27 5G Mobile Launching Soon In India Price Under Rs 22,999 For 8GB and 128GB Storage
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X