Home
Mobile

பிப்.29 அதிரும்.. பட்ஜெட்ல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. அல்ட்ரா டிசைன்.. எந்த மாடல்?

ஓப்போ ரெனோ 11 மாடல்களுக்கு பிறகு அதைவிட கம்மியான பட்ஜெட்டில் சோனி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 67W சார்ஜிங், டைமன்சிட்டி சிப்செட் போன்ற அம்சங்கள் மட்டுமல்லாமல், அல்ட்ரா பீரிமியம் டிசைனோடு ஓப்போ எப்25 ப்ரோ (OPPO F25 Pro) வெளியாக இருக்கிறது.

ஓப்போ எப்25 ப்ரோ அம்சங்கள் (OPPO F25 Pro Specifications): இந்த ஓப்போவில் 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பாண்டா கிளாஸ் பாதுகாப்பு (Panda Glass Protection) வருகிறது.

SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. அல்ட்ரா டிசைன் போன்!

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) வருகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) சிப்செட் கொண்டிருக்கிறது. அதோடு மாலி-ஜி68 எம்சி4 ஜிபியு (Mali G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த ஓப்போ எப்25 ப்ரோ போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. 64 எம்பி மெயின் கேமரா வருகிறது.

இந்த கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி64பி (OmniVision OV64B) சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ்615 (Sony IMX615) சென்சார் கொண்ட 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. அல்ட்ரா டிசைன் போன்!

இந்த மெயின் மற்றும் செல்பீ கேமராக்களில் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், ஏஐ ஸ்மார்ட் இமேஜ் (AI Smart Image) பீச்சர் வருகிறது. இந்த ஓப்போவில் IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வருகிறது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொண்டுள்ளது. இந்த போனில் 5000mAh பேட்டரி வருகிறது. அதோடு 67W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்டுள்ளது. ஸ்லிம் டிசைனில் 7.54 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது.

அதோடு 177 கிராம் எடை கொண்டுள்ளது. இதுவொரு 5ஜி மாடலாகும். ஆகவே, 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் வருகிறது. அதோடு ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் ஜிபிஎஸ் (GPS) போன்ற கனெக்டிவிட்டிகள் வருகின்றன.

லாவா ரெட் (Lava Red) கலரில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த அம்சங்கள் மார்கெட் வட்டாரங்களில் கசிந்தவையாகும். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், அமேசான் (Amazon) தளத்தில் அமோலெட் டிஸ்பிளே, 4K வீடியோ ரெக்கார்டிங், 64W சூப்பர்வூக் சார்ஜிங், IP65 ரெசிஸ்டன்ட் ஆகிய அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

அதோடு வரும் பிப்ரவரி 29ஆம் தேதி இந்த ஓப்போ எப்25 ப்ரோ போன் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, வரும் நாட்களில் இந்த போனின் ஒவ்வொரு அம்சங்களாக வெளியிடப்பட வாய்ப்புள்ளது. இந்த போனின் ஆரம்ப ரூ.20,000 முதல் ரூ.25,000 பட்ஜெட்டுக்குள் இருக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Best Mobiles in India

English summary
OPPO F25 Pro With 64MP Camera To Launch on February 29 Sale From Amazon India Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X