Home
Mobile

எல்லோரும் இந்த OPPO 5ஜி போனுக்காக தான் மரண வெயிட்டிங்.! இதுல அப்படி என்ன ஸ்பெஷல்?

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் 5ஜி போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஒப்போ நிறுவனம் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

அதாவது ஒப்போ நிறுவனம் வரும் மே 15-ம் தேதி இந்தியாவில் ஒப்போ எப்23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய போன் தரமான சிப்செட், பெரிய டிஸ்பிளே, தனித்துவமான கேமரா எனப் பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும். மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த ஒப்போ எப்23 ப்ரோ 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

எல்லோரும் இந்த OPPO 5ஜி போனுக்காக தான் மரண வெயிட்டிங்.!

இந்த ஒப்போ எப்23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.72-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 580 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒப்போ எப்23 ப்ரோ 5ஜி. குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஒப்போ எப்23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த ஸ்னாப்டிராகன் பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

இந்த ஒப்போ எப்23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி கேமரா +2எம்பி டெப்த் சென்சார் +2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ எப்23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ எப்23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

புதிய ஒப்போ எப்23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். மேலும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது இந்த புதிய போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். பின்பு இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ எப்23 ப்ரோ 5ஜி போன்.

எல்லோரும் இந்த OPPO 5ஜி போனுக்காக தான் மரண வெயிட்டிங்.!

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ எப்23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் குறைந்த எடையுடன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி, இந்த புதிய ஒப்போ எப்23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.25,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அசத்தலான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
OPPO F23 Pro 5G to launch in India on May 15: Price and specifications revealed : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X